Home /News /trend /

ஆஹா!! இப்பவே சாப்பிடனும் போல இருக்கே... கேரளாவை கலக்கும் புட்டு ஐஸ்க்ரீம்

ஆஹா!! இப்பவே சாப்பிடனும் போல இருக்கே... கேரளாவை கலக்கும் புட்டு ஐஸ்க்ரீம்

கேரளாவை கலக்கும் புட்டு ஐஸ்க்ரீம்

கேரளாவை கலக்கும் புட்டு ஐஸ்க்ரீம்

Viral Video : தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது கேரளாவிற்கு பாரம்பரிய உணவான புட்டு பாத்திரத்தில் தயாரிக்கப்படும் 'புட்டு ஐஸ்கிரீம்'. என்னது புட்டு ஐஸ்கீரிமா? என ஆச்சர்யமாக இருக்கிறதா? வீடியோவுடன் விளக்கமாக பார்க்கலாம் வாங்க...

மேலும் படிக்கவும் ...
இந்தியாவின் உணவுக்கு என்று வெளிநாட்டவர் இடையே நல்ல வரவேற்பு கிடைக்க காரணம் நமது பாரம்பரியம் தான். காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான உணவுகள், அம்மாநிலத்தின் புகழை பறைசாற்றுகிறது.

தமிழ்நாட்டிற்கு இட்லி, கேரளாவிற்கு புட்டு, ஆந்திராவிற்கு ஐதராபாத் பிரியாணி, கர்நாடகாவிற்கு மைசூர் தோசை என அனைத்து மாநிலங்களுக்கும் அல்டிமேட் ஆன மெனுவை அடுக்கிகொண்டே போகலாம். என்ன தான் பாரம்பரிய உணவு வகைகள் சத்தானதாக இருந்தாலும், புதிது, புதிதாக உணவுகளை கண்டுபிடித்து சாப்பிடுவதில் இருக்கும் சுகமே தனி தான்.

அதுவும் புதிதாக உணவு வீடியோ வெளியானால் அது உடனடியாக சோசியல் மீடியாவில் தாறுமாறாக வைரலாகி, பேமஸ் ஆகிவிடுகிறது. சோசியல் மீடியாவில் பல்வேறு விநோதமான உணவுகளைப் பற்றி பார்த்திருப்போம். அதில் சில சுவை சுமார் தான் என்றாலும், பல உணவுப்பிரியர்களின் விருப்ப பட்டியலில் இடம் பெறும் அளவிற்கு சூப்பராக இருக்கும். ஃபுல்ஜார் சர்பத், டல்கோனா காபி, தந்தூரி டீ என சோசியல் மீடியா மூலமாக ஹிட்டடித்த பல உணவுகளை சொல்லலாம்.

 இதையும் படியுங்கள் ..  டிஸ்னி பொம்மைகள் சேகரிப்பில் புதிய சாதனை படைத்த கேரள பெண் - ஒட்டுமொத்த மதிப்பு எவ்வளவு தெரியுமா? 

சமீபத்தில் அந்த பட்டியலில் சேர்ந்திருக்கிறது கேரளாவிற்கு பாரம்பரிய உணவான புட்டு பாத்திரத்தில் தயாரிக்கப்படும் 'புட்டு ஐஸ்கிரீம்'. என்னது புட்டு ஐஸ்கீரிமா? என ஆச்சர்யமாக இருக்கிறதா? வீடியோவுடன் விளக்கமாக பார்க்கலாம் வாங்க...

  
View this post on Instagram

 

A post shared by Foodie Sha (@foodie_sha_)


 

Foodie sha என்ற நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த மாதம் உணவகம் ஒன்று புட்டு ஐஸ்கீரிமை தயார் செய்யும் வீடியோவை பதிவேற்றியிருந்தார். சோசியல் மீடியாவில் புதுவிதமான உணவு வீடியோவை பதிவிட்டால் என்ன நடக்கும் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா?, புட்டு ஐஸ்கீரிம் சோசியல் மீடியாவின் புது ட்ரெண்டிங்காக மாறிவிட்டது. விதவிதமான வகைகளில், பல சுவைகளில் இந்த புட்டு ஐஸ்கிரீம் கிடைக்கிறது.

இதையும் படியுங்கள்..  'ஊ அண்ட்டவா மாமா' தெலுங்கு பாடலுக்கு நடனமாடிய இன்ஸ்டாகிராம் பிரபலம் கிலி பால்... வைரலான வீடியோ!

கேரளாவின் பாரம்பரிய உணவான புட்டு, கடலைக்கறி, தேங்காய் பால் ஆகியவற்றுடன் பரிமாறப்படுவது வழக்கம். ஆனால் அதே போல் புட்டு குழாயில் இருந்து எடுக்கப்படும் புட்டு ஐஸ்கீரிம் மீது கான்பிளக்ஸ், உலர்ந்த பழங்கள், சாக்லெட் சிப்ஸ், நட்ஸ் என விதவிதமான டாப்பிங் தூவப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

 கேரளாவில் உள்ள பலூடா என்ற ஐஸ்கீரிம் பார்லர், மாநிலம் முழுவதும் 11 இடங்களில் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஓணம் சீசன் ஸ்பெஷலாக புட்டு ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தியுள்ளனர். கேரளாவின் பாரம்பரிய உணவு தயாரிக்க பயன்படும் புட்டு குழாயில் இருந்து குளு, குளு ஐஸ்கீரிம் வருவதை கண்டு ஆச்சர்யமான வாடிக்கையாளர்கள் பலரும் அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். உணவுப்பிரியர்கள் மற்றும் யூ-டியூப்பர்களால் சோசியல் மீடியாவில் வீடியோ வைரலானதை அடுத்து, புட்டு ஐஸ்கீரிமிற்கு செம்ம கிராக்கி இருப்பதாக கூறுகிறார் கடையின் மேலாளர் பிரவீன்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Internet, Kerala, Trending, Viral Video

அடுத்த செய்தி