• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • கேரளாவுக்கு மகுடம் சேர்க்கும் 'ஹைடெக்' பூங்கா- இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

கேரளாவுக்கு மகுடம் சேர்க்கும் 'ஹைடெக்' பூங்கா- இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

கேரளா பூங்கா

கேரளா பூங்கா

சமூக சீர்திருத்தவாதியும், ஆன்மீகத்தை போதித்தவருமான வக்பதானந்தாவின் சேவையை போற்றும் வகையில், கரக்காடு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வக்பதானந்தா பூங்கா நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

  • Share this:
சமூக வலைதளங்களில் உலாவரும் பூங்கா புகைப்படம் ஒன்று நெட்டிசன்கள் பலரையும் கவர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருக்கும் ஏதோ ஒரு நகரம் என்று நினைத்த நெட்டிசன்களுக்கு, அது கேரளாவில் உள்ள பூங்கா என்றதும் ஆச்சரியத்தை இன்னும் அதிகப்படுத்தியது. கேரளாவின் கரக்காடு கிராமத்தில் புதிதாக வக்பதானந்தா பூங்கா திறக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார். இந்த பூங்கா உரலுங்கல் தொழிலாளர் ஒப்பந்த கூட்டுறவு சங்கம் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் 2.80 கோடி செலவில் நிறுவிப்பட்டுள்ள இந்த பூங்காவில் திறந்த மேடை, பேட்மிண்டன் ஆடுகளம், திறந்தவெளி உடற்பயிற்சி நிலையம், குழந்தைகள் பூங்கா, ஓய்வறைகள் மரத்தடியில் அமர்ந்து புத்தகம் படிப்பதற்கான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது விரிவான பார்க்கிங் வசதியுடன் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. 



கேரளாவின் மறுமலர்ச்சிக்காக போராடிய வக்பதானந்தா என்ற கேரளாவின் மூத்த தலைவரை கவுரவிக்கும் வகையில், இந்த பூங்காவிற்கு அவரது பெயரை கேரள அரசு சூட்டியுள்ளது. கேரளாவில் திறக்கப்பட்டுள்ள இந்த பூங்காவிற்குச் செல்லும் மக்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். ஐரோப்பிய மாடலில் உள்ள அந்த பூங்கா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆறு, மலைகள், கடல் என சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற கேரளாவுக்கு இந்த ஹைடெக் பூங்கா மேலும் மணி மகுடமாக சேர்ந்துள்ளது. 

பூங்காவின் புகைப்படமும் இணையத்தில் வைரலானது. அந்தப் புகைப்படத்தின் கீழ் கமெண்ட் செய்துள்ள பாலா கிரண் ஐ.ஏ.எஸ், சிறந்த நடைபாதை தேவைப்படக்கூடிய இந்த நேரத்தில், வக்பதானந்தா பார்க்கில் அமைக்கப்பட்டுள்ள வசதிகள் உண்மையிலேயே பெருமைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.  மக்களின் வரவேற்பு தங்களை மகிழ்ச்சியடைய செய்திருப்பதாக அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.




தலசேரியில் பிறந்த வக்பதானந்தா, கரக்காடு கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தார். அவர்களுக்கு நடக்கும் அக்கிரமங்களை தட்டிக்கேட்டார். 1885ம் ஆண்டு முதல் 1939ம் ஆண்டு வரை அந்த பகுதியில் வாழ்ந்த மக்களுக்காக தன் வாழ்நாளை வக்பானாந்தா அர்ப்பணித்தார். மேலும், அந்த பகுதியை தன் ஆன்மீக மையமாகவும் மாற்றினார். அவரின் சமூகசீர்திருத்த பணிகளை அங்கீரிக்க திட்டமிட்ட கேரள அரசு அந்தப் பூங்காவுக்கு வக்பதானந்தாவின் பெயரை சூட்டி பெருமைபடுத்தியுள்ளது


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: