Home » News » Trend

ஆச்சரியப்படவைக்கும் கேரள நபரின் கார் பார்க்கிங் திறமை - வைரலாகும் வீடியோ

கேரளாவைச் சேர்ந்த ஒரு ஓட்டுநர் எஸ்யூவி காரை பார்க்கிங் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆச்சரியப்படவைக்கும் கேரள நபரின் கார் பார்க்கிங் திறமை - வைரலாகும் வீடியோ
கேரளாவைச் சேர்ந்த ஒரு ஓட்டுநர் எஸ்யூவி காரை பார்க்கிங் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
  • News18 Tamil
  • Last Updated: September 8, 2020, 10:38 PM IST
  • Share this:
பொதுவாக சிலர் வாகனம் ஓட்டுவதில் மிகவும் சிறப்பானவர்களாக இருப்பார்கள். சாலை, நிலப்பரப்பு அல்லது இடத்தைப் பொருட்படுத்தாமல் அவர்களால் சிறப்பாக வாகனத்தை ஓட்ட முடியும். அத்தகைய திறமையான ஓட்டுநரின் வீடியோ ஒன்று சமூக வலையத்தில் வெளிவந்துள்ளது.

அந்த வீடியோவில் ஒருவர், அவரது காரை ஒரு வித்தியாசமான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளார். அதில் அவர் தனது காரை ஒரு நடைபாதைக்கு அடுத்த ஒரு குறுகிய இடத்தில் நிறுத்தி வைத்துள்ளார். அங்கிருந்து அந்த காரை வெளியேற்றுவது சாத்தியமில்லை என்றுதான் அனைவருக்கும் தோன்றும். ஆனால் அவர் அதை சுலபமாக வெளியே எடுத்துச் செல்கிறார். இந்த வீடியோவை 3,000-க்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.

மேலும் இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ள ஒருவர் “மலையாளியின் தன்னம்பிக்கைதான் உங்களுக்கு" என்று எழுதியுள்ளார்.



வீடியோவை பார்த்த மற்றொருவர், "முதலில் அந்த இடத்தில் கார் எவ்வாறு நிறுத்தப்பட்டது" என்று சந்தேகத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த நபர் எப்படி காரை முதலில் நிறுத்தினார் என்பதைப் பார்க்க விரும்புகிறேன் என வேறு ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். இதற்கு வீடியோவை பதிவிட்டவர், பதில் அளித்துள்ளார். அதில், கார் அங்கிருந்து எப்படி வெளியே எடுக்கப்பட்டதோ அது வழியால் தான் அந்த இடத்தில் நிறுத்தப்பட்டது" என்று குதர்க்கமாக பதிலளித்துள்ளார்.



மேலும் நிறைய நெட்டிசன்கள், வாகனத்தை வெளியே எடுத்த நபரைப் பாராட்டினார்கள் மற்றும் அவரது திறமையைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். ஒருவர் "இது ஆச்சரியம். ஆனால் ஆபத்தானது" என்றும் கூறினார். மேலும் ஒரு நபர், முழுமையான வீடியோவை பதிவிட்டிருந்தார். அதில் கார் எவ்வாறு நிறுத்தப்பட்டது மற்றும் அந்த குறுகிய இடத்திலிருந்து அது எவ்வாறு எடுக்கப்பட்டது என்பதைக் எல்லோராலும் காண முடிந்தது.



இருப்பினும், அவரது காரின் பின்புறத்தைக் காண எந்த கேமராவும் இல்லை. 360 டிகிரி கேமராக்கள், சென்சார்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பிற அம்சங்களுடன் அது பொருத்தப்பட்டிருந்தால் எளிதாக இருந்திருக்கும். ஆனால் அது ஒரு மேனுவல் வாகனம் என்பதால் வாழ்த்துக்கள் என்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
First published: September 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading