• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • ’ஐபோன் 12 பார்சலில் வந்த சோப்புக்கட்டி, 5 ரூபாய் நாணயம்’ - அதிர்ச்சியடைந்த இளைஞர்

’ஐபோன் 12 பார்சலில் வந்த சோப்புக்கட்டி, 5 ரூபாய் நாணயம்’ - அதிர்ச்சியடைந்த இளைஞர்

’ஐபோன் 12 பார்சலில் வந்த சோப்புக்கட்டி, 5 ரூபாய் நாணயம்’

’ஐபோன் 12 பார்சலில் வந்த சோப்புக்கட்டி, 5 ரூபாய் நாணயம்’

அமேசான் தளத்தில் ஐபோன் 12 ஆர்டர் செய்த இளைஞருக்கு வந்த பார்சலில் சோப்புக்கட்டிகள் இரண்டும், 5 ரூபாய் நாணயமும் இருந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார்.

  • Share this:
அமேசான் தளத்தில் ஐபோன் 12 ஆர்டர் செய்த இளைஞருக்கு வந்த பார்சலில் சோப்புக்கட்டிகள் இரண்டும், 5 ரூபாய் நாணயமும் இருந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார்.

கேரள மாநிலம் கொச்சி பகுதியைச் சேர்ந்த நூருல் அமீன் என்ற இளைஞர், அமேசான் தளத்தில் 70,900 ரூபாய் மதிப்புள்ள ஐபோன் 12 போனை ஆர்டர் செய்துள்ளார். அக்டோபர் 12 ஆம் தேதி ஆர்டர் செய்த அவருக்கு ஐபோன் பார்சலும் வந்தடைந்தது. அப்போது, ஐபோன் இருக்கும் என ஆசையாக பார்சலை திறந்து பார்த்தபோது, நூருல் அமீனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. 70,900 ரூபாய் மதிப்புள்ள ஐபோன் இருக்கும் இடத்தில் விம் டிஷ் சோப்புக் கட்டிகள் இரண்டும், 5 ரூபாய் நாணயமும் இருந்துள்ளது. இதனால், அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்ற நூருல் அமீன், இவையனைத்தையும் வீடியோவாக பதிவு செய்ததுடன் சமூகவலைதளத்திலும் பதிவிட்டார்.

அவருடைய பதிவு இணையத்தில் வைரலானது. அத்துடன் கொச்சி சைபர் கிரைம் பிரிவில் இது தொடர்பாக புகாரும் பதிவு செய்தார். இது குறித்து பேசிய நூருல் அமீன், " அமேசான் தளத்தில் மெகா ஆஃபர் விற்பனை அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பெரும்பாலான பொருட்களுக்கு பல்வேறு விலையில் ஆஃபர்கள் கொடுக்கப்பட்டிருந்தது.



எனக்கு ஐபோன் வாங்க வேண்டும் என விருப்பம் இருந்ததால், ஐபோன் 12 -ஐ ஆர்டர் செய்தேன். அதன்படி, ஐபோன் பார்சலும் எனக்கு வந்தடைந்தது. மிகவும் ஆசையாக பிரித்து பார்த்தபோது, விம் டிஷ்வாஷ் சோப்புக் கட்டிகள் 2, 5 ரூபாய் நாணயமும் இருந்தது. இது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்ததால், உடனடியாக சமூகவலைதளத்தில் பதிவிட்டு, காவல் நிலையத்திலும் புகார் செய்தேன்" எனத் தெரிவித்தார்.

நூருல் அமீனின் புகார் மீது விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் அமேசான் அலுவலகம் மற்றும் தெலுங்கானா விற்பனை பிரிவை தொடர்பு கொண்டனர். மேலும், பார்சல் அனுப்பிய தொலைபேசி எண்ணையும் டிராக் செய்தபோது ஜார்க்ண்ட் மாநிலத்தைச் சேர்ந்தது என கண்டுபிடிக்கப்பட்டது. மோசடி நடைபெற்று இருப்பதை உறுதிப்படுத்திய காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில், நூருல் அமீனின் பணத்தை திரும்பத் தருவதற்கு அமேசான் ஒப்புக்கொண்டது.

orders iPhone 12, receives Vim bar

இரண்டு நாட்களில் பணம் நூருல் அமீனின் அக்கவுண்டுக்கு திரும்ப வந்துவிடும் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஐபோன் ஆர்டர் செய்த இளைஞருக்கு பார்சலில் சோப்புக்கட்டிகளும், 5 ரூபாய் நாணயமும் வந்தது ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்கள் வாங்குபவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man orders iPhone online, gets bar of soap instead

இதேபோல், கடந்த வாரம் மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஐபோன் 12 -ஐ ஃபிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்திருந்தார். அவருக்கும் இதேபோல் சோப்புக் கட்டிகள் பார்சலில் வந்தது. அவரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி, ப்ளிப்கார்ட் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகியுள்ளார். தொடர் முயற்சியின் காரணமாக சிம்ரன்பாலுக்கு பணத்தை திரும்ப தருவதாக ஃப்ளிப்கார்ட் ஒப்புக்கொண்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: