• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • Dubai Lottery: ரூ. 40 கோடி ஜாக்பாட் - துபாயில் லாட்டரி வென்ற கேரளாவைச் சேர்ந்த நபர்!

Dubai Lottery: ரூ. 40 கோடி ஜாக்பாட் - துபாயில் லாட்டரி வென்ற கேரளாவைச் சேர்ந்த நபர்!

மாதிரி படம்

மாதிரி படம்

அபுதாபியில் ஓட்டுனராகப் பணியாற்றி வரும் கேரளாவைச் சேர்த்த ரெஞ்சித் சோமராஜன், அரபி எமிரேட்ஸில், ஒரு ரேஃபில் லாட்டரியில் 20 மில்லியன் திர்ஹாம் (தோராயமாக ₹ 40 கோடி) வென்றுள்ளார்.

  • Share this:
கேரளாவைச் சேர்ந்த சோமராஜன் கடந்த மூன்று வருடங்களாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்த நிலையில் தற்போது 40 கோடி வென்றுள்ளார்.

அபுதாபியில் ஓட்டுனராகப் பணியாற்றி வரும் கேரளாவைச் சேர்த்த ரெஞ்சித் சோமராஜன், அரபி எமிரேட்ஸில், ஒரு ரேஃபில் லாட்டரியில் 20 மில்லியன் திர்ஹாம் (தோராயமாக ₹ 40 கோடி) வென்றுள்ளார். ஜாக்பாட்டை வென்ற இவருக்கு, கடந்த சில ஆண்டுகளாக போதிய வருமானமும், சரியான வேலை அமையாமல் வாழ்க்கை போராட்டமாக இருந்துள்ளது. செய்தி நிறுவனமான காலீஜ் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 37 வயதான இவர் மற்றும் ஒன்பது கூட்டாளிகளும் லாட்டரியின் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சோமராஜன் கடந்த மூன்று ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகிறார். இதுகுறித்து பேசிய சோமராஜன், இரண்டாவது மற்றும் மூன்றாம் பரிசை வெல்வதாக எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் முதல் பரிசு கிடைத்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். நல்ல சம்பளத்தில் ஒரு வேலை கிடைக்க முயற்சி செய்து கொண்டிருந்ததாகவும், இப்படியொரு ஜாக்பாட் கிடைக்கும் என்று அவர் ஒருபோதும் நினைத்ததில்லை என்று கூறினார்.

“2008 முதல் இங்கே இருக்கிறேன். துபாய் டாக்சி மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு ஓட்டுனராகப் பணியாற்றி வந்துள்ளேன். கடந்த ஆண்டு, ஓட்டுனர் மற்றும் விற்பனையாளராகவும் பணியாற்றினேன். ஆனால், சம்பளக் குறைப்பால், வாழ்க்கையை நடத்த மிகவும் கடினமாக இருந்தது" என்றும், என் வாழ்நாளில் இவ்வளவு பெரிய தொகையை நான் வெற்றி பெற்று ஜெயிப்பேன் என நினைத்து கூட பார்த்ததில்லை, தற்போது வெற்றி பெற்ற தொகையை, மற்ற ஒன்பது நபர்களுடனும் பகிர இருப்பதாகவும் கூறினார்.

மேலும் இதுகுறித்து பேசிய அவர் நாங்கள் மொத்தம் 10 நபர்கள். மற்றவர்களும், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், போன்ற நாடுகளில் இருந்து வந்துள்ளனர். அவர்கள், ஹோட்டலின் வேலட் பார்க்கிங்கில் பணியாற்றுகிறார்கள்.ஒரு நாள் வெளியில் செல்லும் போது ‘இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்’ என்று விற்பனை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டை பார்த்தோம். அப்போது அனைவரும் சேர்ந்து லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கினோம். என் பெயரில் வாங்கிய இந்த டிக்கெட்டுக்கு, ஒவ்வொருவரும் 100 திர்ஹாம் கொடுத்தோம் என தெரிவித்துள்ளார். தற்போது வெற்றி பெற்றிருப்பதால் இந்த தொகை அனைவருக்கும் பொதுவானது என்பது குறிப்பிடத்தக்கது.

Also read... YouTuber: காற்றாலையால் இயங்கும் கார்: இயற்பியலாளரை பந்தயத்தில் தோற்கடித்து $10,000 வென்ற யூடியூபர்!

வாழ்க்கையில் நம்பிக்கையை தளர விடக்கூடாது என்றும், அதிர்ஷ்டம் நிச்சயமாகத் தேடி வரும் என்பதையும் அனைவரும் நினைக்க வேண்டும் என்று உற்சாகமாகக் கூறினார். தனது சமீபத்திய டிக்கெட்டுகளில், இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசுகள் முறையே 3 மில்லியன் திர்ஹாம் மற்றும் 1 மில்லியன் திர்ஹாம் என்று அவர் கூறினார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: