Home » News » Trend

அதிவேகமாக வந்த மினிவேன் மோதாமல் நூலிழையில் தப்பிய நபர்... சாலையில் நடந்த அதிசயம் - வைரல் வீடியோ

சாலையில் நடக்கும் இந்த காட்சிகளின் சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதிவேகமாக வந்த மினிவேன் மோதாமல் நூலிழையில் தப்பிய நபர்... சாலையில் நடந்த அதிசயம் - வைரல் வீடியோ
சிசிடிவி காட்சிகள்
  • Share this:
கேரளாவில் ஆளில்லா சாலையில் நடந்த சென்ற நபர் மீது அதிவேகமாக வந்த மினிவேன் அவர் மீது நூழையில் மோதாமல் சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.

கேரளாவில் ஆளில்லா சாலையின் ஒரமாக ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த மினிவேன் ஒன்று நூழையில் அவர் மீது மோதாமல் சென்றுள்ளது.

தீடிரென்று நடந்த இந்த சம்பவத்தால் அவர் என்ன நடந்தது என்று தெரியாமல் திகைத்துள்ளார். அதன்பின் என்ன செய்வதென்று தெரியாமால் முன்னும் பின்னும் நடந்துள்ளார். மினிவேன் மோதமால் அவர் உயிர்தப்பியது மிகப் பெரிய அதிசயமாகவே அமைந்தது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.





இந்த வீடியோவை பார்த்த பலர் அந்த நபர் உயிர்தப்பிய அதிசயம் குறித்து பல்வேறு விதமான கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.







மினிவேன் மோதாமல் செல்லும் 22 வினாடிகள் இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading