• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • லாட்டரியில் விழுந்த 6 கோடி ரூபாய்... அந்தப் பணத்தில் வாங்கிய நிலத்தில் புதையல்...!

லாட்டரியில் விழுந்த 6 கோடி ரூபாய்... அந்தப் பணத்தில் வாங்கிய நிலத்தில் புதையல்...!

அதில் 20 கிலோ 400 கிராம் எடை கொண்ட 2,595 பண்டைய நாணயங்கள் இருந்துள்ளன

  • News18
  • Last Updated :
  • Share this:
    கேரளாவில் லாட்டரி டிக்கெட்டில் கிடைத்த 6 கோடியில் நிலம் வாங்கிய நபருக்கு மற்றுமொரு அதிர்ஷ்டமாக அந்நிலத்தில் புதையல் கிடைத்துள்ளது.

    கேரளாவின் 66 வயதான ரத்னகாரன் பிள்ளை என்பவர் கடந்த ஆண்டு லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். அதில் அதிர்ஷ்டமாக 6 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

    அந்த பணத்தை உபயோகமாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்த அவர் வீட்டின் அருகே நிலம் வங்க முடிவு செய்துள்ளார். அந்த நிலத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்பதே அவரின் விருப்பம்.



    எனவே, பழைய கிருஷ்ணர் கோவில் அருகே 27 செண்ட் நிலத்தை வாங்கியுள்ளார். அதில் மரவல்லிக் கிழங்கை மண்ணில் புதைக்க நிலத்தைத் தோண்டியுள்ளார்.

    தோண்டிய போது பானையில் தட்டும் சத்தம் கேட்டுள்ளது. மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்ற ரத்னகாரன் அதை பொருமையாக தோண்டி வெளியே எடுத்துள்ளார். அதை திறந்து பார்த்தபோது 100 ஆண்டுகள் பழமையான நானயங்கள் இருந்துள்ளன. கிட்டத்தட்ட 20 கிலோ 400 கிராம் எடை கொண்ட 2,595 பண்டைய நாணயங்கள் இருந்துள்ளன.

     



    உடனே உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்களுடன் தொல்பொருள் துறை அதிகாரிகளும் வந்து அந்த நாணயங்களை சோதனை செய்துள்ளன.

    அதில் 1885 முதல் கடைசியாக திருவிதாங்கூரை ஆட்சி புரிந்த ஸ்ரீ சித்திரா திருனல் பால ராம வர்மாவின் 1949 ஆம் ஆண்டு வரையிலான நாணயங்கள் என கண்டறிந்துள்ளனர். பின் அந்த நாணயங்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த புதையல் ரத்னகாரன் பிள்ளையின் நிலத்தில் கண்டெடுக்கப்பட்டது என்பதால், அவருக்கு சட்ட விதிமுறைகளின்படி சன்மானம் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    Also See...

    ஒரே இரவில் காரை உடைத்துக்கொண்டு வளர்ந்த மரம்...! ஆனால்...


    நீச்சலுடை போட்டியில் வழுக்கி விழுந்த பிரபஞ்ச அழகி போட்டியாளர்.. மனஉறுதியுடன் மீண்டும் வீரநடை - வைரல் வீடியோ

    Also See...





     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: