பால்கனியில் இருந்து தலைகீழாக விழுந்த நபர்... நொடிப் பொழுதில் காலைப் பிடித்து காப்பாற்றிய இளைஞர் - வைரலாகும் வீடியோ

பால்கனியில் இருந்து தலைகீழாக விழுந்த நபர்... நொடிப் பொழுதில் காலைப் பிடித்து காப்பாற்றிய இளைஞர் - வைரலாகும் வீடியோ

பால்கனியில் இருந்து தலைகீழாக விழுந்த நபர்

கேரளாவில் நொடிப் பொழுதில் பால்கனியில் இருந்து தலைகீழாக விழுந்த நபரை காப்பாற்றின் இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • Share this:
கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் பாபுராஜ். இவர் கோழிக்கூடு அருகே உள்ள வடகரையில் செயல்பட்டு வரும் வங்கியில் பணம் எடுப்பதற்காக வந்துள்ளார். அதற்காக வங்கியின் வெளியில் உள்ள பால்கனியில் நின்று கொண்டிருந்தார்.

அவரை போல் பலரும் அவரின் அருகில் பால்கனியில் நின்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது திடீரென அருகில் இருந்த நபர் தலைகீழாக பின்னோக்கி பால்கனியில் இருந்து மயங்கி விழுந்துள்ளார். உடனே சுதாரித்து கொண்ட பாபுராஜ் சட்டென்று தலைகீழாக விழுந்த நபரின் காலை பிடித்து விட்டு காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டுள்ளார்.

உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மேலே தூக்கி காப்பாற்றியுள்ளனர். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பலரும் பாபுராஜ் நொடிப்பொழுதில் சாமர்த்தியமாக செயல்பட்டதற்கு அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 



 

இதே போல் கடந்த ஜனவரி மாதம் ஒரு சம்பவம் வைரலானது. அதில் சாலையை கடப்பதற்காக பெண் ஒருவர் சாலையின் ஓரத்தில் நிற்கின்றார். அதே நேரம் அவர் அருகில் ஆண் ஒருவரும் வந்து நிற்கின்றார். இருவரும் சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருக்கையில் எதிரே இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருப்பவர் ஒருவர் சிறுமியிடம் பேசிக்கொண்டிருக்கிறார். திடீரென சிறுமி யாரும் எதிர்பாராமல் சாலையை கடக்க துள்ளலோடு முன் வருகிறார்.

 

 



 

இதனை எதிர்புறம் சாலையை கடக்க நின்று கொண்டிருந்த பெண் கவனித்து சட்டென்று தனது அருகில் இருந்த ஆணின் தோள்பட்டையில் கைவைத்து அவரை காப்பாற்றும் படி கூற உடனே சுதாரித்து கொண்ட இளைஞர் ஓடோடி சிறுமியை நொடிப்பொழுதில் தூக்கி விட்டு சாலையின் மறு ஓரம் நகர்ந்து விடுகின்றார்.

நொடி பொழுதில் நடக்கும் இந்த சம்பவத்தின் வீடியோ இணையவாசிகளை கண் இமைக்காமல் காணவைத்து வைரலானது. பலரும் குழந்தயை காப்பாற்றிய ஆணுக்கும், தக்க சமயத்தில் நினைவூட்டிய பெண்ணுக்கும் பாராட்டு தெரிவித்து வந்தனர்.
Published by:Sankaravadivoo G
First published: