தனக்காக வாங்கிய மதுபானத்தை குடித்ததாக தந்தையை நிர்வாணமாக்கி கடுமையாக தாக்கிய மகன்!

அடிக்கு பயந்த தந்தை மகனின் மதுபானத்தை எடுத்துக் குடித்ததற்கு மன்னிப்பு கோருகிறார். ஆத்திரம் தாங்காமல் ரத்தீஸ் அவரது தந்தையை தாக்குகிறார்.

தனக்காக வாங்கிய மதுபானத்தை குடித்ததாக தந்தையை நிர்வாணமாக்கி கடுமையாக தாக்கிய மகன்!
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: October 3, 2019, 4:16 PM IST
  • Share this:
கேரளாவில் காந்தி ஜெயந்தி தினத்தன்று மதுக்கடைகள் விடுமுறை என்பதால், தான் வாங்கி வைத்திருந்த மதுவை தந்தை குடித்ததால் அவரை நிர்வாணமாக்கி மகன் தாக்கியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் மதுக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. குடிக்கு அடிமையாக இருப்பவர்கள், முந்தைய நாளே வாங்கி வைத்து கொள்வர்.

இந்நிலையில் கேரளா மாநிலம் ஆழப்புழா மாவட்டத்தின் குர்திக்காடு பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ரத்தீஸ் மதுபாட்டில் வாங்கி வீட்டில் மறைத்து வைத்துள்ளார்.


நேற்று அதனை எடுக்க சென்ற அவர், மாதுபாட்டில் காணாததால் தந்தையை சந்தேகப்பட்டு விசாரித்துள்ளார். ஒருக்கட்டத்தில் தந்தை கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், வெறித்தனமாக தாக்குவதும், பயந்துபோன தந்தை தனக்கு ஒன்றும் தெரியாது என்று மன்றாடும் காட்சிகள் பத்வாகியுள்ளன. தாயின் முன்னரே, தந்தையை நிர்வாணமாக்கி ரத்தீஸ் தாக்குகிறார்.

பின்னர், அடிக்கு பயந்த தந்தை மகனின் மதுபானத்தை எடுத்துக் குடித்ததற்கு மன்னிப்பு கோருகிறார்.  தொடர்ந்து ஆத்திரம் தாங்காமல் ரத்தீஸ் அவரது தந்தையை தாக்குகிறார். இந்தச் சம்பவம் அனைத்தும் வீடியோவில் பதிவானது.

Loading...

இந்த வீடியோவை  கிரின் கேரளா என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டு வைரலானது. பின்னர், அந்தப் வீடியோ நீக்கப்பட்டது. இதுகுறித்து பலரும் அதிகாரிகளுக்கு புகார் அளித்ததைத் தொடர்ந்து, ரத்தீஸ் மீது காவல்துறையினர், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  ரத்தீஸ் தலைமறைவாகியுள்ளார்.

மதுபானத்துக்காக தந்தையை இரக்கமில்லாமல் தாக்கிய நிகழ்வு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Also see:

First published: October 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...