ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ரூ.13 லட்சம் மதிப்புள்ள காரை ஏலத்தில் ரூ.43 லட்சத்திற்கு வாங்கிய பக்தர்!

ரூ.13 லட்சம் மதிப்புள்ள காரை ஏலத்தில் ரூ.43 லட்சத்திற்கு வாங்கிய பக்தர்!

Thar

Thar

Trending | தனது மகன் கார் கேட்ட நிலையில், ஏலத்தில் அதை ரூ.50 லட்சம் என்றாலும் வாங்கிவிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தாராம். ஆனால், இவருக்கு முன்னால் ஒருவர் ரூ.40.50 லட்சத்திற்கு கேட்டிருந்த நிலையில், அடுத்ததாக ரூ.43 லட்சத்திற்கு கேட்ட இவருக்கு கார் கிடைத்தது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கேரள மாநிலத்தில், மஹிந்திரா நிறுவனத்தின் தார் என்ற கார் ரூ.43 லட்சத்திற்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. சந்தையில் இந்த காரின் விலை ரூ.13 லட்சம் ஆகும். குருவாயூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா கோவிலுக்கு இந்த காரை, மஹிந்திரா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஆனந்த் மஹிந்திரா தானமாக வழங்கியிருந்தார்.

அந்தக் காரை கோவில் நிர்வாகம் கடந்த  திங்கள்கிழமை (ஏப்ரல் 6) ஏலத்தில் விட்டது. இதில் 15 ஏலதாரர்கள் பங்கேற்று ஏலம் கேட்டனர். காரின் ஆர்மப விலையாக ரூ.15 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், முதல் கேள்வியிலேயே அதை ரூ.33 லட்சத்திற்கு ஒருவர் கேட்டு, எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து, காருக்கு அடுத்தடுத்து கூடுதலான விலையை ஏலத்தில் பங்கேற்றவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். இறுதியாக துபாய் நாட்டில் தொழில் செய்து வரும் விக்னேஷ் விஜயகுமார் என்ற நபர், இந்தக் காரை ரூ.43 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். இந்த ஏலத் தொகை மட்டுமல்லாமல், காரை தன் பெயரில் பதிவு செய்து கொள்வதற்கு முன்பாக அவர் ஜிஎஸ்டி வரித் தொகையும் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏலம் விடுவது முதல்முறை அல்ல

குருவாயூர் கோவிலில் மஹிந்திரா தார் மாடல் கார் ஏலத்திற்கு விடப்படுவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி இதேபோன்ற ஏலத்தை குருவாயூர் கோவில் தேவஸ்தானம் நடத்தியது. ஆனால், அந்த சமயத்தில் ஒரே ஒரு நபர் மட்டுமே ஏலத்தில் பங்கேற்றார். அவருக்கு கார் ஏலம் விடப்பட்டது என்றாலும் பின்னர் அந்த ஏலம் ரத்து செய்யப்பட்டது.

Also Read : இந்த படத்தில் மறைந்திருக்கும் புலி... கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்!

டிசம்பரில் நடத்தப்பட்ட ஏல நடவடிக்கையில் பங்கேற்ற சுபாஷ் பனிக்கர் என்ற நபர் அந்தக் காரை ரூ.15.10 லட்சம் மதிப்பில் ஏலம் எடுத்தார். பஹ்ரைனில் பெரும் தொழிலதிபராக இருக்கும் தனது நண்பர் அமல் முகம்மது அலியின் சார்பில் அவர் இந்த காரை வாங்கியிருந்தார்.

ஆனால், போதுமான விளம்பரம் செய்யப்படாமல் ஏலம் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டி ஹிந்து சேவா சங்கம் என்ற அமைப்பு சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அந்த ஏல நடவடிக்கையை தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்தது.

Also Read : ட்விட்டர் நிறுவனத்தை அலற விட்ட எலான் மஸ்க்... 

மகனுக்காக கார் வாங்கிய விஜயகுமார்

தற்போதைய ஏலத்தில் மேலாளர் அருண் மூலமாக பங்கேற்று தார் மாடல் காரை விஜயகுமார் வாங்கியுள்ளார். தனது மகன் கார் கேட்ட நிலையில், ஏலத்தில் அதை ரூ.50 லட்சம் என்றாலும் வாங்கிவிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தாராம். ஆனால், இவருக்கு முன்னால் ஒருவர் ரூ.40.50 லட்சத்திற்கு கேட்டிருந்த நிலையில், அடுத்ததாக ரூ.43 லட்சத்திற்கு கேட்ட இவருக்கு கார் கிடைத்தது. குருவாயூரப்பரின் பக்தரான விஜயகுமார், இந்த ஏலத்தில் கார் எடுத்திருப்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்.

First published:

Tags: Kerala, Thar