• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • திருமணத்திற்கு அண்டாவில் மிதந்து வந்த மணமக்கள் ... கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்

திருமணத்திற்கு அண்டாவில் மிதந்து வந்த மணமக்கள் ... கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்

அண்டாவில் மிதந்து வந்த மணமக்கள்

அண்டாவில் மிதந்து வந்த மணமக்கள்

வெள்ளப்பெருக்கு , நிலச்சரிவு என இயற்க்கை சீற்றத்தால் தத்தளிக்கும் கேரளாவில் தற்போது மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை தொலைத்து வரும் நிலையில் திருமண தம்பதிகள் தங்கள் வாழ்வை தொடங்க அண்டாவில் வந்து இறங்கிய செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • Share this:
    கேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை காரணமாக மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கனமழை, நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக பொதுமக்கள் சொல்லில் அடங்கா துயருக்கு ஆளாகியுள்ளனர். நிலச்சரிவின் காரணமாக வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. வெள்ள நீரில் ஆற்றங்கரையோரம் உள்ள வீடுகள் அடித்துச்செல்லப்படும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப்பணிகளை மாநில அரசு துரிதப்படுத்தியுள்ளது.

    இந்தநிலையில் கோட்டயம் மாவட்டம் கால்லேபள்ளம் பகுதியில் கரைபுரண்டு ஓடும் ஆற்றில் முழு வீடு மூழ்கியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது. நல்லவேளையாக அந்த வீட்டில் இருந்த அனைவரும் வீடு சரிவதற்கு முன்னதாக மீட்கப்பட்டுள்ளனர்.கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.



    வெள்ளப்பெருக்கு , நிலச்சரிவு என இயற்க்கை சீற்றத்தால் தத்தளிக்கும் கேரளாவில் தற்போது மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை தொலைத்து வரும் நிலையில் திருமண தம்பதிகள் தங்கள் வாழ்வை தொடங்க அண்டாவில் வந்து இறங்கிய செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.



    செங்கனூர் மருத்துவமனையில் சுகாதார பணியாளர்களாக பணிபுரிந்து வந்த மணமக்களுக்கு பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.



    திருமணம் நடத்தவிருந்த நிலையில் கேரளா முழுமையும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது.



    இருப்பினும் நிச்சயிக்கபட்ட நாளில் தங்கள் திருமணத்தை நடத்தி முடிக்க அனைவரும் முடிவு செய்த நிலையில்தளவாடி என்ற பகுதியில் உள்ள கோயிலில் திருமணத்தை நடத்தவும் முடிவு செய்திருந்தனர்.



    கோவில் முழுமையும் கடந்த 2 நாளில் அதிக வெள்ளநீர் சூழ்ந்த நிலையில், சமையலுக்கு பயன்படுத்தும் பெரிய அண்டாவில் மணமக்கள் ஏறி உட்கார்ந்து கொண்டு நீரில் மிதந்து கோவிலுக்கு வந்தனர் .

     



    இறுதியில் திருமணம் திட்டமிட்டபடியே எளிமையாக நடந்து முடிந்துள்ளது.



    தற்போது இந்த படங்கள் இணையத்தில்  வைரலாகி வருகின்றது. பலரும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வெள்ளம் , நிலச்சரிவிற்கு நடுவே மணமக்களின் இச்செயல் இணையவாசிகள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: