கைதிகளால் செய்யப்படும் பிரியாணி ஆன்லைனில் விற்பனை: கேரள சிறைச்சாலையில் புது முயற்சி..!

127 ரூபாய்க்கு 300 கிராம் பிரியாணி, சிக்கன் லெக் பீஸ் , மூன்று சப்பாத்தி, கப் கேக் , சாலட் , ஊறுகாய் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்.

கைதிகளால் செய்யப்படும் பிரியாணி ஆன்லைனில் விற்பனை: கேரள சிறைச்சாலையில் புது முயற்சி..!
சிறையில் கைதிகள்
  • News18
  • Last Updated: July 12, 2019, 4:08 PM IST
  • Share this:
இன்று ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவது பிரபலம் என்பதைவிட அதைவிட சுலபம் எதுவுமில்லை எனலாம். மனித உழைப்பு, நேரம் மிச்சம் என்பன போன்ற விஷயங்கள்தான் இதன் ஹைலைட்.

அதேபோல் வணிகர்களும் ஓட்டல் திறந்து, அதற்கு வாடகை, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட தொல்லைகள் இல்லாமல் எளிமையாக கடையின் பெயரை மட்டும் ஆன்லைனில் பதிவு செய்துவிட்டால் போதும். வீட்டிலேயே சுவையாக சமைத்து ஆன்லைன் ஆர்டர்கள் மூலம் பார்சல் செய்து அனுப்பிவிடலாம். கல்லா களைகட்டும்.

இந்த சிறந்த யோசனையை பொது மக்களுக்கு மட்டுமல்ல. சிறைக் கைதிகளுக்கும்தான்...


கேரளாவின் திருச்சூர் மாவட்டம் விய்யூர் மத்தியச் சிறைச்சாலையில் கைதிகளால் அருமையாக பிரியாணி சமைத்து அதை பிரபல ஆன்லைன் நிறுவனமான ஸ்விகியில் விற்பனைச் செய்கின்றனர். அதுவும் மக்கள் வாங்கக் கூடிய வகையில் 127 ரூபாய்க்கு காம்போ ஆஃபர்களும் அளிக்கின்றனர்.அந்த காம்போவில் 300 கிராம் பிரியாணி, சிக்கன் லெக் பீஸ் , மூன்று சப்பாத்தி, ஒரு கப்பில் கேக் , சாலட் , ஊறுகாய் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில். அதோடு வாழைஇலையும் இலவசம். ஆஹா... இதைவிட சிறந்த உணவு அதுவும் குறைந்த விலையில் கிடைத்தால் தினம் தினம் விருந்துதான்.இந்த காம்போ ஆஃபருக்காகவே ஆர்டர்கள் குவிகிறதாம். ஒருநாளைக்கு 25,000 சப்பாத்திகளும் 500 பிரியாணிகளும் விற்கப்படுவதாகக் சிறையிலிருந்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சுவையானதாகவும், தரமானதாகவும் குறைந்த விலையில் கிடைத்தால் யார் தான் வாங்காமல் இருப்பார்கள்.

இந்த ஆன்லைன் ஆர்டர் மட்டும்தான் இவர்களுக்குப் புதிது. ஆனால் விற்பனை கடந்த 2011 ஆண்டிலிருந்தே நடத்தி வருகின்றனர். Freedom Food Factory தான் இவர்கள் சமைக்கும் உணவுகளை வெளியே விற்றுள்ளது. ”2011 ஆண்டு முதல் சப்பாத்தி விற்கத் துவங்கினோம். அதன்பிறகு பிரியாணி, சைவம் , அசைவ உணவுகளையும் விற்கத் துவங்கினோம். தற்போது டிஜிபி ரிஷிராஜ் சிங் பரிந்துரை செய்ததால்  ஆன்லைனில் விற்கத் தொடங்கியுள்ளோம் என்று விய்யூர் மத்திய சிறைச்சாலையில் பணிபுரியும் நிர்மலா நந்தன் நாயர் பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.தற்போது இந்த காம்போ ஆஃப்ர் மட்டும்தான் ஆன்லைனில் கிடைக்கிறது. நல்ல வரவேற்புக் கிடைத்தால்.. கூடுதல் உணவு வகைகளை சேர்க்கலாம் என்ற திட்டம் உள்ளது என்றுக் கூறியுள்ளார் நிர்மலா.

இந்த ஆன்லைன் முயற்சியைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக மற்றொரு திட்டத்தையும் ஆலோசனை செய்து வருகிறார்கள். அதாவது, கேரள மத்திய சிறைச் சாலையிலேயே ஒரு இடம் ஒதுக்கி பொது மக்களை அனுமதிக்கவுள்ளது. கட்டணம் செலுத்தும் வகையில் இரவு பகல் என அனுமதி அளிக்கவுள்ளது. பொது மக்களுக்கும் சிறை வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளவே இந்த முயற்சி.

இதையும் படிங்க:

கைதிகளால் நடத்தப்படும் நூலகத்துடன் கூடிய காஃபி ஷாப்..!
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்