ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

டிஸ்னி பொம்மைகள் சேகரிப்பில் புதிய சாதனை படைத்த கேரள பெண் - ஒட்டுமொத்த மதிப்பு எவ்வளவு தெரியுமா? 

டிஸ்னி பொம்மைகள் சேகரிப்பில் புதிய சாதனை படைத்த கேரள பெண் - ஒட்டுமொத்த மதிப்பு எவ்வளவு தெரியுமா? 

Rizwana Ghori

Rizwana Ghori

Rizwana Ghori Disney Toy Collections | ரிஸ்வானா சேகரித்து வைத்திருக்கும் பொம்மைகள் ஒவ்வொன்றும் மிகவும் அரிதானவை மற்றும் பல உரிமையாளர்களால் பயன்படுத்தப்படாதவை.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

துபாயில் வசித்து வரும் கேரளாவைச் சேர்ந்த பெண் தொழிலதிபரான ரிஸ்வானா கஹோரி என்பவர் 1,300க்கும் அதிகமாக டிஸ்னி ப்ளஸ் பொம்மைகளை சேகரித்து லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார்.

டி.வி பார்ப்பது, புத்தகம் படிப்பது, சுற்றுலா செல்வது என வழக்கமான பொழுதுபோக்கில் நேரத்தை செலவிட விரும்பாத பலர், தங்களுக்கான பிரத்யேக ஹாபி, அதாவது ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட நேரம் ஒதுக்கிக்கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக ஸ்டாம்ப் சேகரிப்பது, பூச்சிகளை சேகரித்து பதப்படுத்துவது, பழங்கால நாணயங்களை சேகரிப்பது என தங்களது தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்றார் போல் செய்து வருவதை நாம் பார்த்திருப்போம்.

இந்நிலையில் கேரளாவை பூர்வீகமாக கொண்ட துபாயில் வசித்து வரும் தொழிலதிபரான ரிஸ்வானா கஹோரி என்ற 33 வயது பெண்மணி டிஸ்னி ப்ளஸ் கார்ட்டூன் கதாபாத்திரங்களில் வரும் பொம்மைகளை சேகரிப்பதை தனது ஹாபியாக வைத்துள்ளார். ‘அப்படி என்னங்க ஒரு 100 அல்லது 200 பொம்மைகளை சேகரிப்பாரா?’ என எண்ண வேண்டாம். இதுவரை 1,350 டிஸ்னி ப்ளஸ் பொம்மைகளை சேகரித்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்த ரிஸ்வானா கஹோரி, கடந்த 28 வருடங்களுக்காக துபாயில் வசித்து வருகிறார். ரிஸ்வானாவின் தாத்தா ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர், ஆனால் இவர் பிறந்த பிறகு மொத்த குடும்பமும் திருச்சூருக்கு குடியேறியுள்ளனர். தற்போது இவருடன் அப்பா ரசாக் கான் கஹோரி, அம்மா ஷாஹிதா பானு மற்றும் 8 வயது மகளான தன்யா ஆகியோருடன் வசித்து வருகிறார். ரிஸ்வானாவின் சிறு பருவத்தில் அவரது அப்பா அவருக்கு டிஸ்னி பொம்மைகளை வாங்கிக்கொடுத்துள்ளார். அப்போது அதனை சேகரிக்க ஆரம்பித்த ரிஸ்வானா, தொடர்ந்து 25 வருடங்களாக டிஸ்னி ப்ளஸ் பொம்மைகளை சேகரித்து வருகிறார்.

Also Read : மகளுக்காக தந்தை செய்த செயல் - கண்கலங்க வைக்கும் புகைப்படம்

தனது இந்த சேகரிப்பு பற்றி ரிஸ்வானா கூறுகையில், “இது ஒரு பொழுபோக்கு என்பதை விட என் வாழ்க்கையாகவே மாறிவிட்டது. இது என்னுடைய ஒரு பகுதி மற்றும் நான் யார் என்பதை உணர்த்தக்கூடியது. எனது தந்தையால் தான் எனக்கு இந்த ஆர்வம் ஏற்பட்டது. அப்போதிலிருந்து இன்று வரை உலகம் முழுவதிலும் இருந்து 1,300 டிஸ்னி ப்ளஸ் பொம்மைகளை சேகரித்து வைத்துள்ளேன். அதிக எண்ணிக்கையிலான டிஸ்னி பொம்மைகளை சேகரித்ததற்காக இந்தியாவின் லிம்கா புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளேன்” என்கிறார்.

மேலும் ரிஸ்வானா தன்னிடம் உள்ள பொம்மைகள் அனைத்தும் விலைமதிப்பற்றவையாக கருதுகிறார். அதனால் தான் பலரும் தன்னிடம் இருக்கும் பொம்மைகளை வாங்க முன்வந்த போதும், அதனை ஒருநாளும் விற்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததே இல்லையாம். சமீபத்தில் கூட நபர் ஒருவர் ரிஸ்வானாவிடம் உள்ள சில பொம்மைகளை 80 லட்சம் ரூபாய்க்கு வாங்க முன்வந்த நிலையில், முடியாவே முடியாது என மறுத்துவிட்டாராம்.

Also Read : விண்வெளி வீரர்களுக்கான உணவு தயாரிப்பில் புதுமையை கொண்டு வருவோருக்கு 7.4 கோடி வழக்கப்படும் - நாசா அறிவிப்பு!

ரிஸ்வானா சேகரித்து வைத்திருக்கும் பொம்மைகள் ஒவ்வொன்றும் மிகவும் அரிதானவை மற்றும் பல உரிமையாளர்களால் பயன்படுத்தப்படாதவை. அதனால் அவரிடம் உள்ள 1,300 டிஸ்னி பொம்மைகளின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 3 கோடி இருக்கு என கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரிஸ்வானாவின் கலெக்‌ஷன் ரூமுக்குள் நுழைந்தாலே அனைவரது கண்ணையும் பறிப்பது லயன் கிங் சிம்பாவின் 5 அடி அகலம், 3 அடி உயரமுள்ள பிரம்மாண்ட பொம்மை தான். உலக அளவில் இதுபோல் வெறும் 40 சிம்பா பொம்மைகள் மட்டுமே விற்பனைக்கு வந்த நிலையில், அதில் ஒன்று தன்னிடம் இருப்பதை ரிஸ்வானா தனக்கு கிடைத்த பொக்கிஷமாக நினைக்கிறார். இந்த பொம்மைகளை ஏலங்கள், அறக்கட்டளைக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சிகள் என பலதரப்பட்ட தளங்களில் இருந்தும் பார்த்து, பார்த்து வாங்கி சேகரித்து வைத்திருக்கிறார்.

Also Read : நீரில் நீந்தி மான்குட்டியை காப்பாற்றிய நாய்

டிஸ்னி பொம்மை சேகரிப்பில் ஆர்வமுள்ள ரிஸ்வானாவின் அடுத்த இலக்கு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள உலக சாதனையை முறியடிப்பது. இதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்திற்கும் விண்ணப்பித்துள்ளார்.

உலகிலேயே யாரும் 1,300 டிஸ்னி பொம்மைகளை சேகரித்து வைத்திருக்க வாய்பில்லை என அடித்துக்கூறும் ரிஸ்வானா, தனது கலெக்‌ஷன்களை முந்த யாருமே கிடையாது என உறுதியாக நம்புகிறார். எனவே நிச்சயம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

First published:

Tags: Disney, Trending