ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இருக்கையில் அமராமல் நடனம் ஆடிக்கொண்டே பேருந்தை ஓட்டும் ஓட்டுநர்: வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

இருக்கையில் அமராமல் நடனம் ஆடிக்கொண்டே பேருந்தை ஓட்டும் ஓட்டுநர்: வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

பஸ் டிரைவர்

பஸ் டிரைவர்

பேருந்தை ஓட்டுபவர் பிரேக், கிளட்ச் போன்றவற்றை மிதிக்காமல் இருக்கையில் கூட அமராமல் பக்கவாட்டில் இருந்து நடனமாடியபடியே பேருந்தை ஓட்டும் காட்சி  அதிர்ச்சியடை வைத்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kerala, India

  கேரளாவில் ஆம்னி பேருந்தில் ஓட்டுநர் இருக்கையில் அமராமல் நடனம் ஆடிக்கொண்டே பேருந்தை ஓட்டும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  கேரள மாநிலம் வடக்கஞ்சேரி பகுதியில் அரசு பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் பரிதபமாக உயிரிழந்தனர். ஆம்னி பேருந்தின் ஓட்டுநர் ஜோமோன் கைதான நிலையில், அவரது பெயரில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

  இதையும் படிங்க: வீட்டுக் கதவைத் திறந்தவர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி - வரவேற்கக் காத்திருந்த சிறுத்தை குட்டி!

  அந்த வீடியோவில், பேருந்தை ஓட்டுபவர் பிரேக், கிளட்ச் போன்றவற்றை மிதிக்காமல் இருக்கையில் கூட அமராமல் பக்கவாட்டில் இருந்து நடனமாடியபடியே பேருந்தை ஓட்டும் காட்சி வெளியாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த நிலையில் விசாரணையில் அந்த வீடியோவில் இருப்பது ஜோமோன் இல்லை என்று தெரியவந்துள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Kerala, Viral Video