முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / குண்டும், குழியுமான சாலையில் ஃபோட்டோசூட் நடத்திய மணப்பெண் - வைரல் ஆன வீடியோ.!

குண்டும், குழியுமான சாலையில் ஃபோட்டோசூட் நடத்திய மணப்பெண் - வைரல் ஆன வீடியோ.!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video | முறையான ஃபோட்டோகிராஃபரை வைத்து படம் பிடித்தால், சாதாரண இடங்களும் கூட அழகானதாக மாறும் என்பதற்கு இந்த வீடியோ சான்றாக உள்ளது.

  • Last Updated :
  • Kerala, India

வாழ்க்கையில் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தன்னை கதாநாயகனாக அல்லது கதாநாயகியாக உணரும் பெருமைமிகு தருணம் தான் திருமணம். வாழ்வில் ஒருமுறை மட்டுமே வரும் இந்த அத்தியாத்தில் நம்மை அழகழகாக படம்பிடித்து என்றென்றும் மலரும் நினைவுகளாக வைத்திருப்போம்.

குறிப்பாக, ப்ரீ வெட்டிங் ஃபோட்டோசூட் என்று இப்போதெல்லாம் சிறப்பான ஃபோட்டோ மற்றும் வீடியோக்களை பலரும் எடுத்து வருகின்றனர். ஃபோட்டோசூட் நடத்துவதற்கு அழகான இடங்களையும் தேர்வு செய்கின்றனர். அருகாமையில் உள்ள கடற்கரை, ஆறு, மலைகள் போன்ற இடங்களுக்கு சென்று படப்பிடிப்பு நடத்துகின்றனர்.

ஆனால், பார்க்கவே முகம் சுழிக்கும்படியாக உள்ள இடத்தில் ஃபோட்டோ எடுத்துக் கொள்ள யாரும் விரும்பமாட்டார்கள். இருப்பினும், முறையான ஃபோட்டோகிராஃபரை வைத்து படம் பிடித்தால், சாதாரண இடங்களும் கூட அழகானதாக மாறும் என்பதற்கு இந்த வீடியோ சான்றாக உள்ளது.

கேரளாவில் பருவமழைக் காலம் நீடித்து வந்த நிலையில், அங்குள்ள சாலைகள் குண்டும், குழியுமாக மாறிவிட்டன. இதனையே தன் திருமணத்திற்கு ஃபோட்டோசூட் நடத்தும் இடமாக மாற்றிக் கொள்ள திட்டமிட்டார் மணப்பெண்.

Also Read : வயதான தம்பதியினரின் மகனை கண்டுபிடிக்க உதவிய ஸ்விக்கி ஏஜென்ட் - உயிர்ப்புடன் வாழும் மனித நேயம்.!

வழக்கமான மணப்பெண் அலங்காரத்தில் சிவப்பு பட்டுச்சேலை உடுத்தி, ஆபரணங்கள் அணிந்து எல்லோர் மனதையும் கவரும் அழகோடு காட்சியளிக்கிறார் இந்தப் பெண்.

அத்துடன் குண்டும், குழியுமாக சாலையில் தேங்கியுள்ள மழைநீரை ஒட்டி மணப்பெண் ஒய்யாரமாக நடந்துவர, அந்தக் காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.


இந்த வீடியோவை சுமார் 4.3 மில்லியன் பயனாளர்கள் பார்த்துள்ளனர். திருமண நிகழ்வின் ஒரு பகுதியாக சமூக அவலங்களை மணப்பெண் தோலுரித்துக் காட்டியிருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதமே, கேரளாவில் மோசமான சாலைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன. இதுகுறித்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

Also Read : பயணத்தின் போது பாதியாக பிரிந்த ரயில்..! - இங்கிலாந்தில் அதிகாரிகளை பதறவிட்ட டிக் டாக் யூசரின் வீடியோ

சாலையை சீரமைக்க வேண்டி வழிபாடு

முன்னதாக, கர்நாடக மாநிலத்தில் இதுபோன்று சாலையின் மோசமான நிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சமூக ஆர்வலர் ஒருவர் விநோதமான போராட்டத்தை நடத்தினார். உடுப்பி அருகே வோலக்காடு பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தா என்பவர், சாலையில் அங்கப்பிரதட்சணம் செய்தார்.

top videos

    சாலைகளில் உள்ள பள்ளங்கள் காரணமாக நாட்டில் மிக அதிகப்படியான விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையில், சாலைகளின் பள்ளங்களால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 5,626 பேர் பலியாகியுள்ளனர் என்று மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2,140 என்றும், 2020ஆம் ஆண்டில் 1,471 என்று பதிவாகியுள்ளது.

    First published:

    Tags: Kerala, Trending, Viral Video, Wedding Photoshoots