ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

போன் பண்ணி தொல்லை தரக் கூடாது.. மணமகளுக்கு நூதன ஒப்பந்தம் போட்ட மணமகனின் நண்பர்கள்

போன் பண்ணி தொல்லை தரக் கூடாது.. மணமகளுக்கு நூதன ஒப்பந்தம் போட்ட மணமகனின் நண்பர்கள்

வைரல்

வைரல்

 50 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் மணப்பெண் கையெழுப்பத்துடன் கூடிய ஒப்பந்த பத்திரம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Kerala, India

  தோழனுக்கோ, தோழிக்கோ திருமணம் என்றால் நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி, பெட்ரோல், கேஸ் சிலிண்டர், தக்காளி, சின்ன வெங்காயம் என மாநிலத்தில் அப்போது எதன் விலை உச்சத்தில் இருக்கிறதோ அதை பரிசாக கொடுத்து கிண்டலடிப்பது, ஒன்றுமே இல்லாத பெரிய சைஸ் கிப்ட் பாக்ஸைக் கொடுத்து ஏமாற்றுவது, கேக் வெட்டுவது, பட்டாசு வெடிப்பது, டான்ஸ் ஆடுவது, திருமண மண்டபத்திற்கு வெளியே விதவிதமாக பிளக்ஸ் பேனர்கள் வைப்பது என பலவிதமான கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை பார்த்திருப்போம்.

  ஆனால் கேரளாவில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமகனின் நண்பர்கள் பரிசாக கொண்டு வந்த ஒப்பந்தத்தில் மணப்பெண் கையெழுத்திட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் ஆகி மனைவி வந்தவுடனே, நண்பர்களை விட்டு ஆண்கள் விலகுவது உள்ளது. ஏனென்றால் பெண்கள் திருமணத்திற்கு பிறகு கணவன் தன்னுடன் மட்டுமே அதிக நேரம் செலவிட வேண்டும் என நினைப்பதால், ஆண் தனது நண்பர்களுடன் நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டிய நிலை உருவாகிறது. இந்த உலக வழக்கத்தை புரிந்து கொண்ட கேரள மணமகனின் நண்பர்கள், மணப்பெண்ணிடம் முன்கூட்டியே ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

  கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரகு என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அர்ச்சனா என்ற பெண்ணுக்கும் நவம்பர் 5ம் தேதி பாலக்காட்டில் உள்ள கஞ்சிக்கோட்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தில் பங்கேற்ற மணமகன் ரகுவின் நண்பர்கள், “கல்யாணத்திற்கு பிறகும் இரவு 9 மணி வரை அவர் தனது நண்பர்களுடன் நேரத்தை செலவிட அனுமதிப்பதாகவும், அந்த சமயத்தில் போன் செய்து தொல்லை தரமாட்டேன்” என்றும் உறுதி அளிப்பதாக அச்சிடப்பட்ட ஒப்பந்தத்தில் மணப்பெண் அர்ச்சனாவிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

  இலுப்பை சாராயம் குடித்து மட்டையான காட்டு யானைகள்! ஒடிஷாவில் சுவாரஸ்ய சம்பவம்!

   50 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் மணப்பெண் கையெழுப்பத்துடன் கூடிய ஒப்பந்த பத்திரம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரகு கஞ்சிக்கோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அர்ச்சனா வங்கி தேர்வுக்கு தயாராகி வருகிறார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ரகு பேட்மிண்டன் வீரர்கள் 17 பேர் அடங்கிய வாட்ஸ் அப் குழுவில் உள்ளார். இவர்கள் தான் தனது நண்பருடன் திருமணத்திற்கு பிறகும் நட்பை தொடருவதற்காக அப்படியொரு ஒப்பந்தத்தில் மணப்பெண்ணிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

  Math Riddles | மூளைக்கு சவால்.. காலியாக உள்ள கட்டத்திற்கான சரியான எண்ணை கணடுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்

  கடந்த ஜூலை மாதம் அஸ்ஸாமைச் சேர்ந்த புதுமண தம்பதி தனக்கு என்ன வேண்டும், வேண்டாம் என்பது கட்டுப்பாடுகள் குறித்து ஒருவருக்கு ஒருவர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டது சோசியல் மீடியாவில் வைரலானது. ஒப்பந்தத்தின்படி, ‘மாதத்திற்கு ஒரு பீட்சா மட்டுமே சாப்பிடுவது, தினமும் ஜிம்மிற்குச் செல்வது, ஒவ்வொரு 15 நாட்களுக்குப் பிறகும் ஷாப்பிங் செய்வது போன்ற விஷயங்கள் அடங்கியிருந்தது. இதனைப் பார்த்த அஸ்ஸாமில் உள்ள பிரபல பீட்சா செயின் ஒன்று தம்பதிக்கு மாதம் ஒரு பீட்சாவை இலவசமாக வழங்க முன்வந்தது குறிப்பிடத்தக்கது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Trending News, Trending Video, Viral