தமிழ் பாடலுக்கு செம ஆட்டம் போட்ட கேரள மணப்பெண் - வைரல் வீடியோ

வீடியோ காட்சி

கேரளாவில் மணப்பெண் ஒருவர் சிகப்பு பட்டுச் சேலையில் செம ஆட்டம் போட்டுள்ளார். அதுவும் தமிழ் பாடலுக்கு என்பது கூடுதல் குஷி.

 • Share this:
  கேரளாவில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணப்பெண் ஒருவர் தமிழ் பாடலுக்கு மேடையில் ஆடிய நடனம் அனைவரையும் ஈர்த்துள்ளது.

  திருமணம் என்றாலே உறவினர்கள், நண்பர்கள் என அனைத்து சொந்தங்களும் ஒன்றிணைந்து கேலி, கூத்து, கும்மாளம் என களைக்கட்டும். ஆடம்பாரமாக நடைபெறும் திருமணத்தில் ஆட்டம் பாட்டத்திற்கு பஞ்சமிருக்காது.

  அதுவும் மணப்பெண்ணே மேடையில் ஆட்டம் போட்டால் அது ஒரு தனி ஸ்பெஷலாக தான் இருக்கும். கேரளாவில் மணப்பெண் ஒருவர் சிகப்பு பட்டுச் சேலையில் செம ஆட்டம் போட்டுள்ளார். அதுவும் தமிழ் பாடலுக்கு என்பது கூடுதல் குஷி.  பிரசாந்த் நடித்த மலையூர் மம்பட்டியான் படத்தின் பாடலுக்கு தான் மணப்பெண் நடனமாடி ஆடி உள்ளார். பட்டுச் சேலையில் மணப்பெண் ஆடும் டான்ஸ் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

  இந்த பாடல் யூடியூபில் பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. மணப்பெண் எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் கூலாக டான்ஸ் ஆடி உள்ளார். மணப்பெண்ணின் டான்ஸை ரசித்த பலர் கைத்தட்டி, ஆரவாரம் எழுப்பியும் உற்சாகப்படுத்தினர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: