• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • செண்டை மேளம் + பேண்ட் வாத்தியத்தில் ‘முக்காலா முக்காபலா’...! வைரல் ஹிட் வீடியோ

செண்டை மேளம் + பேண்ட் வாத்தியத்தில் ‘முக்காலா முக்காபலா’...! வைரல் ஹிட் வீடியோ

News18

News18

  • News18
  • Last Updated :
  • Share this:
    காதலன் படத்தில் இடம்பெற்றிருந்த ஒரு பாடலானது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், வேறு விதமாக அது ஹிட் அடித்துள்ளது.

    1994-ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் காதலன். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்தின் அத்தனை பாடல்களும் அருமை ரகம். குறிப்பாக முக்காலா முக்காபலா என்ற பாடல், தற்போது வரை அதிகம் பேர் கேட்கப்படும் பாடலாக இருக்கிறது.

    பிரபு தேவா இந்த பாடலில் மைக்கேல் ஜான்சன் போல நடனம் ஆடியிருப்பார். இந்த நடனமும் தற்போது வரை பிரபலம்தான். இந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த பாடல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், வேறு விதமாக.

    முக்காலா முக்கபலா பாடலை கேரளாவில் பாரம்பரிய செண்டை மேளமும், பேண்ட் வாத்தியம் இசை குழுவினர் சேர்ந்து வாசிக்க அற்புதமாக இருக்கும் வீடியோவை
    பிரபல பாடகி சுஜாதாவின் மகள் ஸ்வேதா மோகன் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோதான் தற்போது வைரலாக பரவி வருகிறது.



    ஸ்வேதா மேனனும் தன் அம்மாவை போலவே தனித்துவமான குரலில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பாடி அசத்தி வருகிறார்.

    Also See...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: