தேர்தல் வெற்றிக்காக கேரளாவில் நேர்த்திக்கடன் செலுத்திய பிரதமர் மோடி!

வாரணாசி தொகுதி மக்களை போன்று கேரள மக்களும் தனக்கு முக்கியமானவர்கள்தான் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்

தேர்தல் வெற்றிக்காக கேரளாவில் நேர்த்திக்கடன் செலுத்திய பிரதமர் மோடி!
பிரதமர் மோடி
  • Share this:
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி எடைக்கு இணையாக தாமரை மலர்களை காணிக்கை செலுத்தி வழிபாடு நடத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி குருவாயூர் கோவிலில் வழிபாடு நடத்துவதற்கு டெல்லியில் இருந்து நேற்றிரவு தனி விமானம் மூலம் கேரள மாநிலம் கொச்சி சென்றார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் சதாசிவம், மத்திய அமைச்சர் முரளிதரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அங்குள்ள ஆளுநருக்கான விருந்தினர் மாளிகையில் இரவு தங்கிய பிரதமர் மோடி காலை கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் குருவாயூர் சென்றடைந்தார். அங்கிருந்து காரில் குருவாயூர் கோவிலுக்கு சென்றார்.
பாரம்பரிய முறைப்படி மேல் சட்டை இல்லாமல் வேஷ்டி அணிந்தபடி வந்த பிரதமரை கோவில் நிர்வாகத்தினர் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்று கருவறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மோடி வழிபாடு நடத்தினார்.

 இதற்கு பின்னர் மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்காக தனது எடைக்கு நிகராக தாமரை மலர்களை மோடி காணிக்கையாகச் செலுத்தினார்.

பாஜக பொதுக்கூட்டம்:

இதைத்தொடர்ந்து குருவாயூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, அண்மையில் நடைபெற்ற தேர்தலில் மக்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கான தங்களது பிரதிநிதிகளை தேர்வு செய்திருப்பதாகக் கூறினார். ஆனால், பாஜகவினர் தங்கள் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு சேவையாற்றுவார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கிராமப்புறம் மற்றும் மீனவர்கள் நலன் காப்பதற்காக கால்நடை மற்றும் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, கால்நடைகளுக்கு நோய் தாக்குவதை கட்டுப்படுத்த நாடு முழுமைக்கான நோய் தடுப்பூசி திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

வாரணாசி தொகுதி மக்களை போன்று கேரள மக்களும் தனக்கு முக்கியமானவர்கள் என்றும் நிபா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க மாநில அரசுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் மோடி உறுதியளித்தார்.

படங்கள்: 
First published: June 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading