• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • பிஸ்கெட்டுகள், பேக்கரி பொருட்கள் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தெய்யம் முகம் - கேரள கலைஞரின் சாதனை!

பிஸ்கெட்டுகள், பேக்கரி பொருட்கள் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தெய்யம் முகம் - கேரள கலைஞரின் சாதனை!

தெய்யம் முகம்

தெய்யம் முகம்

தெய்வம் என்ற சொல்லில் இருந்து தெய்யம் என்ற சொல் உருவானது என்று கூறப்படுகிறது. தெய்யம் முகம் என்பது மிக மிக பிரசித்தி பெற்றது.

  • Share this:
24 அடி நீளத்தில், பிஸ்கெட்டுகள் மற்றும் பேக்கரி பொருட்கள் பயன்படுத்தி 'தெய்யம்' முகத்தை உருவாக்கி சாதனை செய்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த கலைஞர்.

கேரளாவைச் சேர்ந்த கன்னூரில் உள்ள ஒரு பேக்கரியின் ஹாலில், இந்த கலைநயம் மிக்க, நேர்த்தியான 'தெய்யம்' முகத்தை உருவாக்கியுள்ளார். இதை உருவாக்க, வெவ்வேறு நிறங்கள் மற்றும் அளவுகளில் கிட்டத்தட்ட 25,000 பிஸ்கெட்டுகள் மற்றும் பேக்கரி பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தெய்யம் என்பது கேரள நாட்டின் பாரம்பரியங்களில் ஒன்று. பலருக்கும் தெய்யம் என்றால் என்ன என்பதை சட்டென்று உணர்ந்திட முடியாது. ஆனால், உலக நாயகனின் அற்புதமான ஒரு படத்தைப் பற்றி கூறினால், தெய்யம் என்றால் என்று எளிதில் புரிந்துவிடும்.

உத்தம வில்லன் திரைப்படத்தில், கமல் இறுதிக்காட்சிகளில் நடித்திருப்பதை நினைவு கூர்ந்தால், தெய்யம் எவ்வளவு நுணுக்கமான கலை என்பதை சுலபமாக உணரலாம். தெய்யம் என்பது கேரளாவின் முக்கியமான, பாரம்பரிய நடனக் கலைகளில் ஒன்றாகும். இது நம்முடைய தமிழ்நாட்டில் கூத்து கட்டி நடனமாடுவது போன்றது தான்.

குறிப்பாக, வடக்கு கேரளாவில், மலபார் பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது. கடவுளிடம் வேண்டுதல் வைத்து, குறிப்பாக அம்மனிடம் வேண்டுதல் வைத்து அது நிறைவேறியவுடன், வேண்டுதலை நிறைவேற்ற இதைப் போன்ற ஒப்பனை செய்து கொண்டு, ஆடை மற்றும் அலங்காரம் செய்து, கோவிலில் நடனம் ஆடுவது வழக்கம். இதனை தெய்யாட்டம் மற்றும் தெய்யம்கோலம் என்றும் கூறுவார்கள்.

தெய்வம் என்ற சொல்லில் இருந்து தெய்யம் என்ற சொல் உருவானது என்று கூறப்படுகிறது. தெய்யம் முகம் என்பது மிக மிக பிரசித்தி பெற்றது. தெய்யம் என்ற கலையின் சாராம்சம் முக ஒப்பனையில் தான் இருக்கிறது. அந்த தெய்யம் முகத்தை தான், கேரளக் கலைஞர் பேக்கரி பொருட்களை வைத்து 24 அடி நீளத்தில் உருவாக்கியுள்ளார்.

Also read... 7 அடி 0.7 அங்குல உயரம் - உலகின் உயரமான துருக்கி பெண்!

'டாவின்சி' சுரேஷ் என்று அடைமொழியுடன் அழைக்கப்படும் அந்த கலைஞர், தெய்யம் முகத்தை உருவாக்க 15 மணிநேரம் ஆனதாகக் கூறினார். டாவின்சி சுரேஷ் பல்வேறு கலைப்பொருட்களைப் பயன்படுத்தி, இந்த கலையை உருவாக்கியுள்ளார். இந்த கலை வடிவம், 'பேக் ஸ்டோரி' பேக்கரியில் தயாரிக்கப்பட்டது. இதை முழவதுமாக செய்து முடிக்க நண்பர்கள் பலரும் உதவினார்கள் என்று தெரிவித்தார்.

'பேக் ஸ்டோரி' பேக்கரியின் உரிமையாளரான செஃப் முகம்மது ரஷீத், தன்னுடைய பேக்கரியில் இந்த தெய்யம் கலையை உருவாக்குமாறு கலைஞர் சுரேஷுக்கு அழைப்பு விடுத்துள்ளார். "வடமலபாரின் பாரம்பரியக் கலைகளின் ஒன்று தெய்யம். அதை பேக்கரி பொருட்களைப் பயன்படுத்தி எங்கள் பேக்கரியில் உருவாக்க டாவின்சி சுரேஷுக்கு நாங்கள் அழைப்பு விடுத்தோம்.

டாவின்சி சுரேஷின் 100 மீடியம் திட்டத்தின் ஒரு பகுதியாக, 'பேக் ஸ்டோரி' பேக்கரியும் பங்கேற்றது' என்று செஃப் கூறினார். அனைவரின் பார்வைக்கு வைக்கப்பட்ட பேக்கரி பொருட்களால் உருவாக்கப்பட்ட தெய்யம் முகம், பின்னர் மக்குவதற்காக கால்நடை பண்ணையிடம் ஒப்படைக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: