Home /News /trend /

கனமழை காரணமாக விடுமுறை - அறிவிப்போடு சேர்த்து மாணவர்களிடம் அன்பு வேண்டுகோள் வைத்த கலெக்டர்.!

கனமழை காரணமாக விடுமுறை - அறிவிப்போடு சேர்த்து மாணவர்களிடம் அன்பு வேண்டுகோள் வைத்த கலெக்டர்.!

மாதிரி படம்

மாதிரி படம்

V.R. Krishna Teja | கேரளாவின் ஆலப்புழா மாவட்ட ஆட்சியராக சமீபத்தில் புதிதாக பொறுப்பேற்று கொண்டுள்ள வி.ஆர். கிருஷ்ண தேஜா (V.R. Krishna Teja), மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற பிறகு தனது முதல் ஆர்டராக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Alappuzha, India
மழை நன்றாக வெளுத்து வாங்கினால் யாருக்கு குஷியோ இல்லையோ பள்ளி மாணவர்களுக்கு மிகவும் குஷியான நாளாக இருக்கும். கனமழை காரணமாக இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பில் நம் மாவட்டம் இருக்காதா என்ற ஏக்கத்தை பள்ளி மாணவர்கள் மத்தியில் இயல்பாக நம்மால் பார்க்க முடியும்.

இந்நிலையில் நம் அண்டை மாநிலமான கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு 15-க்கும் மேற்பட்டோர் பலியாகிய நிலையில் கனமழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டது. இவற்றில் ஆலப்புழாவும் ஒன்று.

கேரளாவின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக மழை பெய்யும் நிலவரத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கல்வி நிறுவனங்களுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். இதனிடையே கேரளாவின் ஆலப்புழா மாவட்ட ஆட்சியராக சமீபத்தில் புதிதாக பொறுப்பேற்று கொண்டுள்ள வி.ஆர். கிருஷ்ண தேஜா (V.R. Krishna Teja), மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற பிறகு தனது முதல் ஆர்டராக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.



தொழில்முறை கல்லூரிகள், அங்கன்வாடிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்தார். ஆலப்புழாவின் புதிய கலெக்டராக கிருஷ்ண தேஜாவின் முதல் ஆர்டரான இந்த விடுமுறை அறிவிப்பு, வெறும் விடுமுறை அறிவிப்பாக இல்லாமல் பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கான எச்சரிக்கை குறிப்பு ஒன்றையும் கொண்டுள்ளது. கலெக்டர் கிருஷ்ண தேஜா அக்கறையுடன் பகிர்ந்து கொண்டுள்ள செய்தி பின்வருமாறு:

Also Read : சித்த பிரமை பிடித்தது போல் அலறி துடித்து கதறி அழுத பள்ளி மாணவிகள்.. அதிர்ச்சி அளிக்கும் வீடியோ

"அன்புள்ள குழந்தைகளே, நான் ஆலப்புழா மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுள்ளது உங்களுக்கு தெரிந்திருக்கும் என நம்புகிறேன். ஆலப்புழா கலெக்டராக எனது முதல் ஆர்டர் உங்களுக்காக, உங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக அமைந்து இருக்கிறது. நமது மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நாளை உங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளேன். இருப்பினும், தயவுசெய்து நீர்நிலைகளுக்கு சென்று குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ அல்லது மீன்பிடிக்கவோ முயற்சிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்.



கனமழை தொடரும் என்பதால் நீங்கள் அனைவரும் உங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும். பெரும்பலான பெற்றோர் வேலைக்கு சென்றிருப்பார்கள். அவர்கள் வீட்டில் இல்லை என்பதால் சுதந்திரமாக இருப்பதாக நினைத்து வெளியே செல்ல வேண்டாம். தொற்று நோய்கள் பரவும் காலம் இது. மிகவும் எச்சரிக்கை தேவை. சரியான நேரத்தில் உணவு உண்ணுங்கள். விடுமுறை என்று பொழுதை வீணே கழிக்காமல் உங்கள் பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்துங்கள். நன்றாக படித்து புத்திசாலியாக இருங்கள்" அன்புடன் வி.ஆர். கிருஷ்ண தேஜா" என்று அந்த விடுமுறை அறிவிப்பில் மாணவர்களுக்கு எச்சரிக்கை மற்றும் அறிவுரை கூறி இருக்கிறார்.

Also Read : விமானத்தில் பிரேக்ஃபாஸ்ட் கொண்டு சென்ற பயணிக்கு ரூ.2 லட்சம் அபராதம்.!

இந்த அறிவிப்பு மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரபூர்வ சோஷியல் மீடியாக்களிலும் ஷேர் செய்யப்பட்டது. இதனை பார்த்த நெட்டிசன்கள் புதிய கலெக்டரின் இந்த வித்தியாசமான விடுமுறை அறிவிப்பிற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். ஒரு யூஸர் “நல்ல என்ட்ரி... வரவேற்கிறோம்,” என்றும் மற்றொரு யூஸர் "மக்களின் மனதை அறிந்த மனிதன்" என்றும் குறிப்பிட்டுள்ளனர். கலெக்டர் கிருஷ்ண தேஜாவின் இந்த விடுமுறை அறிவிப்பு போஸ்ட் இதுவரை ஃபேஸ்புக்கில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமெண்ட்ஸ்களை பெற்று சுமார் 3,900-க்கும் மேற்பட்டவர்களால் ஷேர் செய்யப்பட்டுள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Kerala Flood, Trending

அடுத்த செய்தி