• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • பொம்மையை 8 மாதங்களாக காதலித்து திருமணம் செய்துகொண்ட பாடிபில்டர் - வீடியோ

பொம்மையை 8 மாதங்களாக காதலித்து திருமணம் செய்துகொண்ட பாடிபில்டர் - வீடியோ

பொம்மையை 8 மாதங்களாக காதலித்து திருமணம் செய்துகொண்ட கஜகஸ்தான் பாடிபில்டர்

பொம்மையை 8 மாதங்களாக காதலித்து திருமணம் செய்துகொண்ட கஜகஸ்தான் பாடிபில்டர்

டோலோச்சோ தனது வாழ்க்கையை மார்கோவுடன் தொடங்க திட்டமிட்டு இப்போது திருமணமும் நடைபெற்றுவிட்டது. வரலாற்றில் இதுபோன்றதொரு வித்தியாசமான காதலை எங்கும் நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம்.

  • Share this:
'காதலுக்கு கண் இல்லை', 'காதல் கண்ணை மறைக்கும்', 'காதல் வயது வித்தியாசத்தைப் பார்க்காது', 'காதலுக்கு ஜாதி, மதம் கிடையாது' என்றெல்லாம் பல ஏக வசனங்கள் காதலைப்பற்றி காதலர்கள் பேசுவதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கஜகஸ்தானைச் சேர்ந்த யூரி டோலோச்ச்கோ என்ற பாடிபில்டர் இந்த ஆண்டு அதை நிரூபித்துள்ளார். யூரி டோலோச்ச்கோ தனது பாலியல் தேவைக்காக பயன்படுத்திய பொம்மையுடன் எட்டு மாதங்கள் டேட்டிங் செய்துள்ளார். கடந்த ஆண்டு அந்த பொம்மையை ப்ரொபோஸ் செய்தாராம். அதன்படி இந்த மாதம் அவர் இறுதியாக அந்த பொம்மையை திருமணமும் செய்திருக்கிறார்.

இந்தச் செயல் வினோதமான அல்லது வழக்கத்திற்கு மாறானதாக தோன்றலாம். டோலோச்சோ மார்கோ என்ற தனது செக்ஸ் பொம்மையை அவர் மிகவும் நேசிக்கிறார் என்பது தெரிகிறது. கஜகஸ்தானைச் சேர்ந்த அந்த பாடிபில்டர் தன் திருமண விழாவின் ஒரு சிறு காணொளிப் பதிவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
முன்னதாக, யூரி டோலோச்சோவிடம் 2019ம் ஆண்டு எழுப்பிய கேள்விக்கு, மார்ச் மாதத்தில் தனது காதலியை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று அவரது திட்டங்களுக்கு இடையூறு விளைவித்தது. மேலும் அவர் திருமணத்தை சில மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டியிருந்தது. அக்டோபரில், திருநங்கைகளின் பேரணியில் அவர் தாக்கப்பட்டபோது அவரது திருமணத்தில் மற்றொரு தாமதம் ஏற்பட்டது. இறுதியாக, நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

டோலோச்சோ, மார்கோ என்ற அந்த பொம்மையுடன் 8 மாதங்களுக்கும் மேலாக உறவு கொண்டிருந்தார். கடந்த ஆண்டு டிசம்பரில் அவர் திருமணத்திற்கு சம்மதித்தார். டோலோச்சோ, பாலியல் பொம்மைக்கு சில மாற்றங்களைச் செய்ய பொம்மையை கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றார். ஏனெனில் மார்கோ தோற்றம் திருமணத்திற்கு ஏற்றதாக இல்லையாம்.

Also read: டெல்லியில் வேளாண் சட்டத்திற்கு எதிராக தீவிரமடையும் போராட்டம் - புகைப்படங்கள்

பின்னர், பொம்மைக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. டோலோச்சோ, புது வடிவத்தை ஏற்பது கடினம் என்றாலும் அது பழகிவிடும் என்று கூறினார். அதைத் தொடர்ந்து நிஜ மருத்துவர்களுடன் ஒரு உண்மையான கிளினிக்கில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது குறித்தும் அவர் குறிப்பிட்டார்.

நியூயார்க் போஸ்ட் அளித்த தகவலின்படி, டோலோச்சோ மத்திய ஐரோப்பிய செய்தி நிறுவனத்துக்கு அளித்த ஒரு நேர்காணலில், மார்கோட் தனியாக நடக்க முடியாது என்றும் அவளுக்கு உதவி தேவை என்றும் கூறினார். டோலோச்சோ மார்கோவை ஒரு இளைஞனிடமிருந்து மீட்டதாகவும், அந்த நபர் மார்கோவை தவறாகக் கையாண்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

டோலோச்சோ தனது வாழ்க்கையை மார்கோவுடன் தொடங்க திட்டமிட்டு இப்போது திருமணமும் நடைபெற்றுவிட்டது. வரலாற்றில் இதுபோன்றதொரு வித்தியாசமான காதலை எங்கும் நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இதைப் பற்றி பலவிதமான கற்பனைகளுடன் இணையதளத்தில் பலரும் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: