Viral Video : 'நான் கருப்பன் வந்துருக்கேன்.. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சுட்டேன்' - இணையத்தில் வைரலாகும் சிறுவனின் சாமி ஆடும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் சிறுவனின் சாமி ஆடும் வீடியோ

சிறுவன் ஒருவன் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும், 8 நாளில் காப்பாற்றி கொடுக்கிறேன் என பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Share this:
    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்து 26 ஆயிரத்து 98 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 43 லட்சத்தை கடந்துள்ளது. ஒரே நாளில் மூவாயிரத்து 890 பேர் மரணம் அடைந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 66 ஆயிரத்தை தாண்டியுள்ளது. எனினும் மூன்று லட்சத்து 53 ஆயிரத்து 299 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பில் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 80 சதவீதம் பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதை நிவர்த்தி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், ஒருநாள் தொற்று 35 ஆயிரத்தை நெருங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசிடம் மாநில அரசு கேட்டுக் கொண்டது.

    இதனிடையே இணையத்தில் சிறுவன் ஒருவன், கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும், 8 நாளில் காப்பாற்றி கொடுக்கிறேன் என பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

     

     



     

     

    அதில் சிறுவனிடம் ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு பதில் அளிக்கும் சிறுவன் கருப்பசாமி தனக்குள் வந்து பேசுவது போல் தெரிவிக்கின்றான். அதில், நான் கருப்பன் வந்திருக்கிறேன். நாட்டை காப்பாற்ற வந்துள்ளேன். கொரோனாவில் இருந்து உங்களை காப்பாற்ற, ஊரை காப்பாற்ற வந்துள்ளேன்.

    8 நாளில் காப்பாற்றி கொடுக்கிறேன். ஊரை காத்து கொடுத்துவிடுவேன்.கொரோனாவை மாற்றி விடுவேன். கொரோனாவிற்கு மருந்து கண்டு பிடித்து விட்டேன். வீட்டிலேயே இருங்கள். கைகளை நன்கு கழுவுங்கள். கடையில் சோப்பு வாங்கி கழுவுங்கள் என கூறிவிட்டு மலையேறிவிட்டதாக சிறுவன் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
    Published by:Sankaravadivoo G
    First published: