ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

பாம்புக்கு முத்தம் கொடுத்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்.. வைரல் வீடியோ.!

பாம்புக்கு முத்தம் கொடுத்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்.. வைரல் வீடியோ.!

பாம்பு

பாம்பு

Viral Video | கர்நாடகாவில் நாக பாம்புக்கு முத்தம் கொடுத்து உதட்டில் கடிவாங்கிய நபரின் பதைபதைக்க வைக்கும் வீடியோ காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ராஜநாகம் முதல் அனகோண்டா வரை பல வகையான பாம்புகளை மனிதர்கள் பிடிக்கும் காட்சிகள் இணையத்தில் ஏராளமாக கொட்டிக்கிடக்கின்றன. இதில் பாம்பை பிடிக்கும் நபர்கள் சுற்றியிருப்பவர்களை வியக்க வைப்பதற்காக அதன் தலைப்பகுதியில் முத்தம் கொடுப்பதை பார்த்திருப்போம். இந்த சம்பவங்களில் பாம்பால் கடிப்பட்ட நபர்கள் பலர் உண்டு. அப்படியொரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி காண்போரை பதற வைத்து வருகிறது.

கர்நாடக மாநிலம் பொம்மனகட்டே என்ற இடத்தில் உள்ள சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த நாக பாம்பை பாம்பு பிடிக்கும் நபர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் தான் காப்பாற்றிய நாகப்பாம்பின் பின்னால் இருந்து முத்தமிடுகிறார். தான் பிடிபட்டதால் மிகுந்த ஆக்ரோஷத்தில் இருந்த பாம்பு, திரும்பிய வேகத்தில் அவரது உதட்டில் கொத்திவிடுகிறது. இதனால் பதற்றம் அடைந்து அந்த நபர் பாம்பை விட்டுவிடுகிறார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியான அங்கிருந்த அனைவரும் விலகிச் செல்கின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கூட மற்றொரு நபர் ஓடும் பாம்பை விரட்டிச் சென்று அதன் வாலைப் பிடித்து சீண்டுகிறார். திடீரென படம்மெடுத்து பாம்பு எழுந்திருப்பதைக் கண்டு திகைத்த அந்த இளைஞர் சில அடி தூரம் நகர்ந்துவிட்டு மீண்டும் ஓடும் பாம்பின் பின்னால் சென்று அதனை பிடிக்கிறார். பின்னர் அந்த பாம்பு மெதுவாக ஊர்ந்து சென்று இருசக்கர வாகனம் ஒன்றின் சக்கரத்தில் சுற்றிக்கொண்டு படமெடுத்து நிற்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

நாகபாம்பு இளைஞரைத் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து ஏராளமான நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். “பாம்பு பிடிக்கும் நபர் நல்ல பாடம் கற்றுக்கொண்டார்... தேவையில்லாமல் வேடிக்கை காட்டாதீர்கள்” என ஒருவர் பதிவிட்டுள்ளார். சோசியல் மீடியாவில் வைரலாவதற்காக மக்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என மற்றொருவர் கூறியுள்ளார். “இனி மீண்டும் அவர் இப்படியொரு தவறைச் செய்யமாட்டார், அவர் விரைவில் குணமடைய வேண்டுமென கடவுளின் பிரார்த்திக்கிறேன்” என ஒருவர் தெரிவித்துள்ளார். பாம்புகள் பொதுவாக தங்களுக்கு ஆபத்து என தெரிந்தால் மட்டுமே மனிதர்களை தாக்கக்கூடியவை எனவே தேவையில்லாமல் பாம்புகளை நொந்தரவு செய்ய வேண்டாம் என பலரும் அந்த இளைஞருக்கு அட்வைஸ் கூறியுள்ளனர்.

Also Read : குலோப் ஜாமூனை விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதி மறுப்பு - சட்டென்று பயணி எடுத்த முடிவுக்கு குவியும் லைக்ஸ்

வீடியோவில் இருக்கும் அடையாளம் தெரியாத இளைஞர் நாகபாம்பு கடியில் இருந்து உயிர் பிழைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளைக் கொஞ்சுவது போல், காட்டு விலங்குகளை சீண்டாதீர்கள், அவற்றிற்கான மரியாதையை கொடுங்கள் என விலங்கியல் ஆர்வலர்களும், வனத்துறையினரும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். சுமார் 30 விநாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் கண்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் லைக் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர்.

Published by:Selvi M
First published:

Tags: Snake, Trending, Viral Video