பிரபலமாகும் குக்கரில் ஆவி பிடிக்கும் முறை - கர்நாடக காவல்துறையின் சூப்பர் ஐடியா!

பிரபலமாகும் குக்கரில் ஆவி பிடிக்கும் முறை

காவல்துறையினர் உள்ளிட்டோரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கோவிட் தொற்றில் இருந்து தப்பிக்க, முலிகை இலைகளை குக்கரில் வைத்து ஆவி பிடிக்கும் முறை கர்நாடகா காவல்நிலையங்களில் பிரபலமாகியுள்ளது.

2வது அலை கொரோனா தொற்று தென் மாநிலங்களான கர்நாடகா, கேரளா, தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. கர்நாடகாவில் நாள்தோறும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்களான சுகாதாரத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது.

முன்னெச்சரிக்கையாக இருப்பது மட்டுமே மிகச்சிறந்த வழியாக இருப்பதால், கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் கர்நாடக காவல்துறையினர் பின்பற்றி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, சர்ஜாப்பூர் காவல்நிலையத்தில் காலை மற்றும் மாலை என இரண்டு நேரமும் குக்கரில் மூலிகை இலைகளை தண்ணீருடன் வேகவைத்து ஆவி பிடித்து வருகின்றனர். துளசி, தைல இலை, வேப்பிலை ஆகிய இலைகளைப் தண்ணீருடன் குக்கரில் போட்டு, விசில் இருக்கும் இடத்தில் ஒரு குழாயை பொருத்தியுள்ளனர்.

அடுப்பில் சூடேற்றியபிறகு அந்த குழாய் வழியாக வரும் மூலிகை ஆவியை பிடிக்கின்றனர். இதன் நல்ல பலன் அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. காவல்நிலையத்தில் மட்டுமல்லாது வீடுகளிலும் இந்த முறையில் ஆவி பிடிப்பதாக காவலர்கள் தெரிவித்துள்ள காவலர்கள், கோவிட் தொற்றில் இருந்து தப்பிக்க ஜிங்க் மாத்திரைகளையும், மூலிகை கஷாயங்களையும் சாப்பிட்டு வருவதாக கூறியுள்ளனர்.

சர்ஜாப்பூர் காவல்நிலையத்தில் ஆவி பிடிக்கும் முறையை மற்ற காவல்நிலையங்களிலும் காவல்துறையினர் பின்பற்ற தொடங்கியுள்ளனர். மங்களூர் பார்க் காவல்நிலையத்தில் ஒரே நேரத்தில் மூன்றுபேர் ஆவி பிடிக்குமாறு குக்கர் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெல்காவியில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஜியோதிரிலிங் கொனகட்டி, முதன்முதலாக குக்கரில் ஆவி பிடிக்கும் ஐடியாவை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த வித்தியாசமான முயற்சி பரவலான வரவேற்பை பெற்றதையடுத்து சித்திரதுர்கா, சிவமோகா, ஹவேரி உள்ளிட்ட மாவட்ட காவல்நிலையங்களில் உள்ள காவலர்களும் பின்பற்ற தொடங்கினர்.

Also read... கலெக்டர் வழிகாட்டலில் அசத்தும் பெண்கள் குழு... மாஸ்க் தயாரிப்பில் ரூ.30 லட்சம் வருவாய்!

இதேபோல், குஜராத்திலும் மூலிகை ஆவி பிடிப்பதை கிராம மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். மெகாஷ்னா மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள டாரெட்டி (Tareti village) மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் ஆவி பிடித்து வருகின்றனர். டாரெட்டி கிராமத்தில் பினா படேல் என்பவர் வீட்டில் மூலிகை ஆவி பிடிக்கப்படுகிறது. இதற்காக, காலை மற்றும் மாலை சுமார் 30 க்கும் மேற்பட்டோர் அவரது வீட்டின் முன்பு காத்திருக்கின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: