Home /News /trend /

கர்மா ரிட்டர்ன்ஸ்.. நொடிப்பொழுதில் உணர்ந்து திருந்திய இளைஞர் - வைரலாகும் வீடியோ

கர்மா ரிட்டர்ன்ஸ்.. நொடிப்பொழுதில் உணர்ந்து திருந்திய இளைஞர் - வைரலாகும் வீடியோ


கர்மா ரிட்டர்ன்ஸ்

கர்மா ரிட்டர்ன்ஸ்

Viral Video : சமீபத்தில் இளைஞருக்கு கர்மாவை காட்டிச் சென்ற பசு மாட்டின் செயல் வைரலான நிலையில் தற்போது மீண்டும் ஒரு செயல் செயல் இணையத்தில் வைரலாகி உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    இந்து சமயத்தில் கர்மம் அல்லது வினைப்பயன் என்ற சொல்லுக்கு செயல் என்பது பொதுவான பொருள். ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை ஏற்படும் என்பது உலகப் பொது வழக்கு. அந்த வழக்கு போலவே, இந்து சமயத்திலும் ஒவ்வொருவரின் செயல் வினைக்கும் அதற்கேற்றாற்போல் பலன் கிட்டும் என்பதை குறிப்பதற்கு 'கர்மா' சென்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதனை தமிழில் ”வினைப்பயன்” என்றும் கூறுவர்.

    ஒருவன் எப்படி நடக்கிறானோ, அவனும் அது போலவேயாகிறான். கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் அல்லது கர்மவினை ஆகும். அவரவர் கர்மம் அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது. நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீவினையோ, துன்பம் தரும் என்பது வேதவாக்கு. இவ்விதம் கர்மாவை உணர்ந்து திருந்தி வயதானவரிடம் மன்னிப்பு கேட்ட மனிதரின் செயல் இணையத்தில் வைரலாகி உள்ளது. இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில் ஆண் , மற்றும் பெண் இருவரும் சாலையின் ஓரத்தில் சண்டையிட்டு கொண்டிருக்க சாலையில் நடுவே வயதானவர் ஒருவர் பழங்களை வாங்கிக்கொண்டு நடந்து வருகின்றார். வரும் வழியில் அவரது கைப்பையில் இருந்த பழங்கள் கீழே விழுந்து சிதறியது. இதனை சண்டையின் நடுவே பார்த்த பெண் அவருக்கு உதவி செய்யுமாறு இளைஞரிடம் கூற அவரோ கோபத்தில் உதவ வரவில்லை. பெண் உடனே சென்று பையில் பழங்களை எடுத்து கொடுத்து உதவி செய்கின்றார். இதனை பார்த்துக்கொண்டிருந்த இளைஞர் கோபத்தில் திட்டியவாறு வயதானவரின் அருகில் வர இளைஞர் நின்று கொண்டிருந்த இடத்தின் போஸ்டின் மேலே உள்ள மிகப்பெரிய பலகை ஒன்று கீழே விழுந்தது. நல்வாய்ப்பாக இளைஞர் நகர்ந்து வந்து விட்டார். இதனை பார்த்ததும் தனது தவறை உணர்ந்த இளைஞர் உடனே மூதாட்டியின் நெற்றியில் முத்தமிட்டு தனது தவறை உணர்ந்தார். இந்த வீடியோ பலரின் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.



    இதே போன்று சமீபத்தில் கர்மாவை காட்டிச்சென்ற பசுமாட்டின் வீடியோ இணையத்தில் வைரலானது. இளைஞர் ஒருவர் நாயின் காதினை பிடித்து இழுத்து கொடுமை படுத்துகிறார். இதனை கண்டு பசு மாடு ஒன்று ஓடி வந்து காப்பாற்ற முற்படுகின்றது. வாயில்லா விலங்குகளுக்கு விலங்குகளே துணை என்பது போல் இந்த வீடியோ உள்ளது.



    நாயின் காதினை பிடித்து நாய் வலியில் துடிக்கும் வரை அதனை கொடுமை படுத்திய நபரை அவர் கதறும் வரை பசுமாடு வலியை காட்டிச் சென்றது. இந்த வீடியோ கடந்த மாதம் வைரலானது.

    இதே போன்று சாக்லேட் விளம்பரம் ஒன்றில் மூதாட்டி ஒருவர் தனது கைத்தடியை எடுத்துக் கொடுக்க முடியுமா என கேட்க அதற்கு அருகில் போஸ்டில் சாய்ந்து கொண்டு சாக்லேட் சாப்பிட்டு கொண்டிருந்த இளைஞர் கைத்தடியை எடுத்து மூதாட்டியிடம் கொடுக்காமல் தாமதப்படுத்துவார். இறுதியில் இளைஞரின் செயலால் சற்று பொறுமை இழந்த மூதாட்டி தன் கையே தனக்குதவி என்பன போன்று தானே எழுந்து வந்து கைத்தடியை எடுக்கையில் தான் அமர்ந்திருந்த இடத்தில் மேலே இருந்து மிகப்பெரிய மரப்பலகை ஒன்று கீழே விழும்.



    இறுதியில் மூதாட்டி இளைஞருக்கு நன்றி தெரிவிப்பார். இந்த விளம்பரம் பலரின் கவனம் பெற்றது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Viral Video

    அடுத்த செய்தி