இவரு கட்டப்பா இல்லப்பா... உலகக் கோப்பை நாயகனின் புதிய கெட்டப்..! நெட்டிசன்ஸ் ட்வீட்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கபில் தேவ்வின் புதிய தோற்றமும் இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

- News18 Tamil
- Last Updated: April 22, 2020, 3:32 PM IST
இந்திய அணிக்கு முதன்முறைாக உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டனும், முன்னாள் வீரருமான கபில்தேவ் மொட்டை மற்றும் தாடியுடன் இருக்கும் புதிய கெட்டப்பிற்கு பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கியுள்ள கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கு தாங்களே சவரம் செய்து கொண்டு, தங்கள் புது தோற்றத்தினை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கோலி மற்றும் சச்சின் ஆகியோர் ஏற்கனவே பதிவிட்டிருந்த நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கபில் தேவ்வின் புதிய தோற்றமும் இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் அவர் தனது தலையை முழுவதுமாக மொட்டையடித்து தாடியுடன், இருப்பது ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் இணையத்தில் நெட்டிசன்கள் சிலர் கபில்தேவின் இந்த புதிய கெட்டப்பை பாகுபலியில் வரும் சத்யராஜின் கட்டப்பா மற்றும் ஜேம்ஸ்பாண்ட் பட வில்லன் போல் இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கியுள்ள கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கு தாங்களே சவரம் செய்து கொண்டு, தங்கள் புது தோற்றத்தினை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கோலி மற்றும் சச்சின் ஆகியோர் ஏற்கனவே பதிவிட்டிருந்த நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கபில் தேவ்வின் புதிய தோற்றமும் இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Kapil Dev as Kattapa😅 pic.twitter.com/3EPFmYmvKg
— Billgates Billu (@BillgatesBillu) April 20, 2020
Is this Kapil Dev or a James Bond villain
— Irish Maths (@mathsirish) April 20, 2020