Home /News /trend /

விதவிதமான வண்ணங்களில் சமோசாக்களை தயாரிக்கும் கான்பூர் உணவகம்.. அப்படி என்ன ஸ்பெஷல்!

விதவிதமான வண்ணங்களில் சமோசாக்களை தயாரிக்கும் கான்பூர் உணவகம்.. அப்படி என்ன ஸ்பெஷல்!

 சமோசா

சமோசா

வெஜ் சமோசா, வெங்காய சமோசா என பல வெரைட்டிகளில் சமோசாக்கள் கிடைக்கின்றன. அதன்படி இங்கு ஒரு உணவகத்தில் விற்கப்படும் வெரைட்டி சமோசாக்களுக்கு வண்ணமயமான ட்விஸ்ட் கொடுக்கப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்னதான் பாஸ்ட்புட் உணவுகள் மக்களின் சுவை உணர்வுகளை தூண்டினாலும், இன்னும் நம்ம ஊரு பாரம்பரிய உணவு வகைக்கு மவுசு குறைவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் இருக்கும் டீ கடைகள், பேக்கரிகளில் பாரம்பரிய தின்பண்டங்களான பஜ்ஜி, போண்டா, சமோசா ஆகியவை காட்டாயமாக இருக்கும். அந்தளவுக்கு அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவாக இவை இருக்கின்றன. அதிலும் சமோசாக்கள் என்றால் மக்களின் பேவரைட் என்று சொல்லலாம்.

அதிலும், வெஜ் சமோசா, வெங்காய சமோசா என பல வெரைட்டிகளில் சமோசாக்கள் கிடைக்கின்றன. அதன்படி இங்கு ஒரு உணவகத்தில் விற்கப்படும் வெரைட்டி சமோசாக்களுக்கு வண்ணமயமான ட்விஸ்ட் கொடுக்கப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வெரைட்டிகளை தாண்டி மேலும் வித்தியாசமான முறையில் சமோசாக்களை விற்க முடியுமா? என்று யோசிக்கும் அளவுக்கு, பல வண்ணங்களில் சமோசாக்களை சமைத்து ஒருபேக்கரி உணவகம் வழங்குகிறது. ஒவ்வொரு வெரைட்டி சமோசாக்களுக்கும் ஒரு உண்ணக்கூடிய கலர் சேர்த்து அந்த உணவகம் விற்பனை செய்து வருகிறது.

சமீபத்தில் புட் பிளாக்கர் கௌரவ் வாசன் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து கொண்டார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “பப்பு ஜி-யின் கலர் சமோசாக்கள். சமோசா வகைகளை வேறுபடுத்த அதற்கு உணவு வண்ணம் பூசப்படுகிறது. இதுபோல் செய்யலாமா??" என்ற கேள்வியுடன் கேப்ஷன் செய்திருந்தார். மேலும் அந்த பதிவில் உணவகத்தின் இருப்பிடத்தைக் குறிக்க #கான்பூர் உள்ளிட்ட பல ஹேஷ்டேக்குகளையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ALSO READ | உலகின் உயரமான சைக்கிள் தயாரித்து ஓட்டிச் செல்லும் நபர்

அதை வைத்து அந்த உணவகம் கான்பூரில் இருக்கலாம் என யூகிக்கப்பட்டது. மேலும் அந்த வீடியோவில் வண்ண வண்ண சமோசாக்கள் எண்ணெயில் பொரித்தெடுப்பதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அனைத்தையும் பொரித்து முடித்தவுடன் ஒவ்வொரு வண்ணத்தில் உள்ள சமோசாக்களையும் நபர் ஒருவர் உடைத்து காண்பிக்கிறார். ஒவ்வொரு வண்ண சமோசாக்களும் ஒவ்வொரு வெரைட்டியில் இருந்தது.

அந்த வீடியோவை பின்வருமாறு காணலாம்:

 



 




View this post on Instagram





 

A post shared by Gaurav Wasan (@youtubeswadofficial)






 

 

ஒரு நாளுக்கு முன்பு இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து, இந்த கிளிப் 35,000 க்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்துள்ளது. அதேபோல பலரின் கருத்துக்களும் கமெண்ட் செக்ஷனில் குவிந்த வண்ணம் உள்ளது. மேலும் இந்த வீடியோ நெட்டிசன்களின் பல்வேறு ரியாக்ஷனைகளை பெற்று வருகிறது.

சிலர் இந்த வீடியோவிற்கு “ஆஹா” மற்றும் “அற்புதம்” போன்ற கருத்துகளுடன் தங்கள் பாராட்டுகளை வெளிப்படுத்தினாலும், சிலர் இந்த புதிய ட்விஸ்ட்டால் ஈர்க்கப்படவில்லை என்பது போல தெரிகிறது. சமோசா வெரைட்டிக்கு எதற்கு கலர் டேக் என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், சிலர் சமோசாக்களின் இயல்பான வண்ணம் தான் சிறந்தது என தெரிவித்துள்ளனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Trending, Viral Video

அடுத்த செய்தி