• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • மணமகனின் நண்பர்கள் செய்த சேட்டையால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

மணமகனின் நண்பர்கள் செய்த சேட்டையால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

கோப்புப்படம்.

கோப்புப்படம்.

உத்தரப் பிரதேசத்தில் மணமகனின் நண்பர்கள் செய்த காரியத்தால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.

  • Share this:
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்றும் ஆயிரங்காலத்துப் பயிறு என்றும் பழமொழிகள் உண்டு. குடும்பங்கள் ஒண்றிணைந்து நல்ல வரன் பார்த்து மணமக்களைச் சேர்த்துவைப்பர். சிலபோது மணமேடைக்கு வரும் திருமணங்கள் ஏதோவொரு காரணத்திற்காக நின்றுவிடும். அந்த வகையில், மணமகனின் நண்பர்களே ஒரு திருமணம் நிற்கக் காரணமாக இருந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. அங்கு கண்ணாஜ் நகரைச் சேர்ந்த ஒரு பெண் தனது திருமணத்தை மணமகனின் நண்பர்களின் நடத்தையைக் காரணம் காட்டி நிறுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா இதழில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "கடந்த டிசம்பர் 11ம் தேதி மணமகளின் குடும்பம் திருமணத்திற்காக பரேலிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. உறவினரின் கூற்றுப்படி, திருமணத்தின்போது மணமகன் சார்பாக வந்த பல விருந்தினர்கள் குடிபோதையில் இருந்ததால் திருமண ஏற்பாடுகள் தடைபட்டு போனது என்று கூறியுள்ளனர்.

மேலும், மணமகன் குடும்பத்தினர் மேலும் வரதட்சணை கேட்டதாகவும் கூறப்படுகிறது. மணமகன் தரப்பு நடவடிக்கைகளுக்கு மேலும் இடமளிக்க வேண்டாம் என தனது மகள் எடுத்த முடிவுக்கு அவளது தந்தையும் ஆதரவு தெரிவித்திருக்கிறார். "எனது மகளை மதிக்காத ஒருவரை திருமணம் செய்துகொள்ளும்படி நான் அவளைக் கட்டாயப்படுத்த முடியாது" என்றுள்ளார் அவர்.

Also read: கார் உற்பத்தியில் உலகளவில் 5வது இடத்தைப் பிடித்த இந்தியா.. முதலிடத்தில் சீனா

திருமண மேடையிலேயே இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, காவல்துறையினர் வந்து தலையிடும் அளவுக்கு அது சென்றுள்ளது. இதையடுத்து மணமகளின் குடும்பத்தினர் மணமகனின் குடும்பத்திற்கு எதிராக புகார் அளித்தனர்.
இறுதியில் மணமகனின் பெற்றோர் மணப்பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.6.5 லட்சத்தை நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டியிருந்தது. மணமகளின் குடும்பம் கண்ணாஜிலிருந்து வந்திருந்தாலும், மணமகன் பரேலியில் உள்ள பிதாரி செயின்பூர் பகுதியில் வசித்து வருகிறார். அவர்களது திருமணம் இருவரின் குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் ஒரு பொதுவான உறவினர் மத்தியஸ்தராக செயல்பட்டார். மணமகன் மற்றும் மணமகள் இருவரும் முதுகலை பட்டதாரிகள் ஆவர். இந்த சம்பவம் குறித்து இடைத்தரகர் கூறியதாவது, "மணமகளின் குடும்பத்தினர் மணமகனின் பக்கத்தைக் குற்றம் சாட்டினாலும், திருமண ஏற்பாடுகளின்போது இரு தரப்பினரும் தவறாக நடந்துகொள்ளத் தொடங்கினர். அதேபோல மணமகளிடம் யாரும் தவறாக நடந்துகொள்ளவில்லை. திருமணத்தின் போது மணமகன் குடிக்கவில்லை" என்று அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்து பேசிய பித்தாரிச்செயன்பூரின் எஸ்.எச்.ஓ அசோக் குமார் சிங், அந்த பெண்ணின் குடும்பத்தினர் வரதட்சணை புகார் அளித்ததாக தெரிவித்தார். மேலும் கூறுகையில், இரண்டு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சினை என்பதால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. இதனால் அவர்கள் ஒரு தீர்வுக்கு வந்துவிட்டார்கள் என தெரிவித்தார். திருமணத்தை நிறுத்தியிருந்தாலும், மணமகனின் குடும்பத்தினர் மணமகளின் குடும்பத்தை மீண்டும் ஓர் எளிய திருமண விழாவிற்கு சமாதானப்படுத்த முயன்றனர். இருப்பினும், மணப்பெண் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மணமகனின் நண்பர் மணமகளுடன் தவறாக நடந்துகொண்டதால், மணமகளின் உறவினர்கள் திருமணத்திற்கு அனுமதி வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: