HOME»NEWS»TREND»kamala harris future is female socks are selling like hotcakes ahead of her swearing in vin ghta
அமெரிக்காவில் ட்ரெண்ட் ஆகும் கமலா ஹாரிஸின் 'Future is Female' சாக்ஸ்!
கமலா ஹாரிஸ் அணிந்த வெள்ளை சாக்ஸ் டீல் கோடுகளைக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல் அதே வண்ணத்தில் "The future is female" என்ற சொற்றொடரும் பொறிக்கப்பட்டுள்ளது.
கமலா ஹாரிஸ் அணிந்த வெள்ளை சாக்ஸ் டீல் கோடுகளைக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல் அதே வண்ணத்தில் "The future is female" என்ற சொற்றொடரும் பொறிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 59வது ஜனாதிபதி பதவியேற்பு விழா பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடென் (Joe Biden) மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் ஆகியோர் அமெரிக்க கேபிடல் கட்டிடத்தில் (US Capitol building) பதவியேற்க உள்ளனர். இன்று உலகம் முழுவதும் ஓர் அசரீரி போல் ஒலித்துக்கொண்டிருக்கும் பெயர் என்றால் அது அமெரிக்காவின் துணை அதிபராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமலா ஹாரிஸின் பெயர் தான்.
இது தேர்தல் வெற்றி மட்டுமல்ல, வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. வல்லரசு நாடாகக் கருதப்படும் அமெரிக்காவிலேயே, 2020ம் ஆண்டில்தான் முதன்முறையாக ஒரு பெண் துணை அதிபராக தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்.
சமீபத்திய நிகழ்வில், ஹாரிஸ் மற்றும் அவரது சாக்ஸ் டிக்டாக்கில் (TikTok) வைரலாகிவிட்டன. கடந்த வாரம் புதன்கிழமை கமலாவின் உறவினர் (niece) மீனா ஹாரிஸ் தனது அத்தை பற்றிய ஒரு குறுகிய வீடியோவை இன்டர்நெட்டில் பகிர்ந்து கொண்டார். அதே நாளில் தான் அமெரிக்க பிரதிநிதிகள் சபை (US House of Representatives) தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பை இரண்டாவது முறையாக இம்பீச் செய்ய வாக்களித்தது.
அமெரிக்க வரலாற்றில் இரண்டு முறை இம்பீச் செய்யப்பட்ட முதல் அமெரிக்க அதிபர் என்ற அவ பெயரும் டிரம்பையே சாரும். இதனிடையே சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்யப்பட்ட அந்த வீடியோவில் மீனா, பீச் பிளேவர் மின்ட்ஸ்களை (peach flavoured mints) தனது அத்தைக்கு அளிக்கிறார். 'அத்தை, நான் உங்களுக்கு ஒரு பரிசை கொண்டுவந்துள்ளேன்,' 'இம்-பீச்-மின்ட்ஸ்!' ('Im-peach-mints!,) கமலா ஹாரிஸ் இந்த காமெடியைப் புரிந்து கொள்ள ஒரு கணம் எடுத்துக்கொள்கிறார்,
பின்னர் மீனா, மின்ட்களின் பிளேவருடைய ஒரு ஜாடியைக் (jar of the flavoured mints) கமலாவிடம் கொடுத்தார். பின்னர் இருவரும் சத்தமாக சிரிக்கின்றனர். மீனாவின் இந்த டிக்டாக் போஸ்ட் ஏற்கனவே 10 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களைப் பெற்றுள்ளது. அவர் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் கணக்குகளிலும் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார், இந்த வீடியோ கிளிப் இப்போது மக்களுக்கு மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது. பலரும் டிரம்பை எதிர்த்துவரும் வேளையில் இந்த வீடியோ மக்களிடையே கவனம் பெற்றுள்ளது.
வீடியோவில், துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா, பேஷன் போலிஸின் வாக்குகளை (fashion police’s vote) வென்றதுடன், அமெரிக்க இளைஞர்களுடன் தனது டைம்லேஸ் பேஷன் மற்றும் சார்டியோரியல் தேர்வுகளுக்காக பிரபலமாக உள்ளார், ஒரு நேர்த்தியான, நடுநிலை நிறமுடைய பான்ட்யூட் உடையை கமலா அணிந்திருந்தார். இருப்பினும், காலில் ஷூ அல்லது காலனிகளை அணையாமல், வெறுமனே சாக்ஸ் அணிந்திருந்தார்.
கமலா ஹாரிஸ் அணிந்த வெள்ளை சாக்ஸ் டீல் கோடுகளைக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல் அதே வண்ணத்தில் "The future is female" என்ற சொற்றொடரும் பொறிக்கப்பட்டுள்ளது. Glamour ன் தகவல்களின்படி, வீடியோவில் கமலா ஹாரிஸ் அணிந்திருந்த சாக்ஸ் கம்பல் பூடில் (Gumball Poodle) என்ற நிறுவனத்தைச் சேர்ந்தவை. தங்கள் தயாரிப்புகள் அமெரிக்காவில் தயாரிக்கப்படுகின்றன என்றும், தற்போது நிறுவனத்தின் இணையதளம் மூலம் $13 க்கு சில்லறை விற்பனை செய்வதாகவும் நிறுவனம் பெருமை பேசுகிறது.
இந்த வீடியோவுக்குப் பிறகு, இந்த சாக்ஸ் தேவை மக்களிடையே அதிகரித்துள்ளதால் நிறுவனம் இப்போது ஷிப்பிங் செய்ய தாமதமாகிவிடுமோ என்று அஞ்சுகிறது. கமலா ஹாரிஸ் தனது சர்டோரியல் தேர்வுகளுடன் ஒரு அறிக்கையை வெளியிடுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக கடந்த ஆண்டு நவம்பரில் அவர் வெற்றி உரை நிகழ்த்தியபோது, அவர் ஒரு புஸ் வில்லுடன் ஒயிட் ட்ரெஸ்ஸை அணிந்திருந்தார். அவரது தேர்வு கடந்த சில ஆண்டுகளில் வாக்குரிமை இயக்கம் மற்றும் பெண்கள் அணிவகுப்புகளை (suffrage movement and the women’s marches) ஊக்குவித்துள்ளது. பெண்களின் முன்னேற்றத்தை தாரகமந்திரமாக கமலா கொண்டுள்ளார் என்பது அவரின் செயல்பாடுகளில் தெரிகிறது.