தாத்தாவோடு பெசன்ட் நகர் பீச்சில் வாக்கிங்... சென்னை அனுபவத்தை பகிர்ந்த கமலா ஹாரீஸ் - சமூக வலைதளங்களில் பரவும் பழைய வீடியோ

மசாலா தோசை செய்த கமலா ஹாரீஸ்

அமெரிக்க துணை அதிபர் தேர்தல் வேட்பாளராக ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னிறுத்தப்படும் கமலா ஹாரீஸ் மசாலா தோசை சுடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 • Share this:
  இந்திய தமிழக வம்சாவளியைச் சேர்ந்த செனட் உறுப்பினரான கமலா ஹாரிஸ், பிரபல தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கடந்த ஆண்டு பங்கேற்றார்.

  அப்போது தமிழரான தொகுப்பாளினியுடன் இணைந்து மசாலா தோசை செய்து, சென்னையுடனான தனது உறவையும் பகிர்ந்துகொண்டார்.

  இந்த வீடியோவில் அவர் பேசிக்கொள்கையில், வணக்கம்... எப்படி இருக்கிறீர்கள்... உங்களை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது... எனது தாத்தா பெசன்ட் நகரில் வசித்து வந்தார்.  சிறுவயதில் அதிகாலையில் கடற்கரையில் அவருடன் நான் நடைபயணம் செல்வேன் என கமலா ஹாரீஸ் கூறுவதை பலரும் பார்வையிட்டு பகிர்ந்து வருகின்றனர்.
  Published by:Sankaravadivoo G
  First published: