ரியால்ட்டி ஷோவில் கணவரை கன்னத்தில் அறைந்த நடிகை கஜோல்!

ரியால்ட்டி ஷோவில் கணவரை கன்னத்தில் அறைந்த நடிகை கஜோல்!
  • Share this:
கலர்ஸ் டிவி நடத்தும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கஜோல் அவரது கணவர் அஜேய் தேவ்கானை கன்னத்தில் அறையும் பிரமோவை வெளியிட்டுள்ளனர்.

ஹிந்தி பிக்பாஸ் 13வது சீசனை கலர்ஸ் டிவி ஒளிபரப்பி வருகிறது. ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை பாலிவுட்டின் பிரபல நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

பரபரப்பாக செல்லும் ஹிந்தி பிக்பாஸ் 13வது சீசனில் சிறப்பு விருந்தினராக கஜோல் மற்றும் அவரது கணவர் அஜய் தேவ்கானும் கலந்து கொண்டனர். அவர்களிடம் கலகலப்பான கேள்விகளை சல்மான் கேட்கிறார்.

கஜோல் - அஜய் தேவ்கானுக்கு குறும்புத்தனமான ஒரு போட்டியை சல்மான் வைக்கிறார். அந்த போட்டியில் குழப்பி போன கஜோல் தனது கணவர் அஜய் தேவ்கானை அறைந்து விடுகிறார். இந்த வீடியோவை இன்றைய நிகழ்ச்சிக்கான பிரமோவாக வெளியிட்டுள்ளனர்.
First published: January 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்