• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • பெரிய விண்வெளி பாறையால் தாக்கப்பட்ட வியாழன்கோள்... பிரமிக்க வைக்கும் வீடியோ!

பெரிய விண்வெளி பாறையால் தாக்கப்பட்ட வியாழன்கோள்... பிரமிக்க வைக்கும் வீடியோ!

பெரிய விண்வெளி பாறையால் தாக்கப்பட்ட வியாழன்கோள்

பெரிய விண்வெளி பாறையால் தாக்கப்பட்ட வியாழன்கோள்

ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் கூற்றுப்படி, இதுபற்றி நிறைய தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், ஃப்ளாஷ் தாக்கும் பொருள் பெரியதாகவோ அல்லது வேகமானதாகவோ அல்லது இரண்டாகவோ இருக்கலாம் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

  • Share this:
விண்வெளி பற்றிய ஆராய்ச்சி நமக்கு பல ஆச்சர்யங்களையும், அதிசயங்களையும் அனுதினமும் தருகிறது. அப்படி, நம் சூரிய மண்டத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் நாசா உள்ளிட்ட ஆராய்ச்சி நிறுவனங்களும், விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் உலக மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காண்பிப்பதில் தவறியதில்லை. அந்த வகையில், ஒரு விண்வெளி பாறையால் பிரபஞ்சத்தின் ஏதேனும் ஒரு கோள் தாக்கப்பட்டால் எப்படி இருக்கும். அது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீபத்தில், வியாழனை(Jupiter) ஒரு பெரிய விண்வெளி பாறை தாக்கிய நிகழ்வைக் கண்டறிந்த ஒரு அமெச்சூர் பிரேசிலிய வானியலாளர், அதை தனது தொலைநோக்கி மூலம் கேமராவில் படம் பிடித்தார். குறைந்தது ஏழு சுயாதீன அவதானிப்புகள் மூலம் இந்த கண்டறிதல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வியாழன் கோளை தாக்கிய அந்த பாறையின் அளவு தோராயமாக 100 மீட்டர் அளவு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 13ம் தேதி திங்கட்கிழமை மாலை, பெரேரா என்ற அந்த வணியலாளர் தனது 10 அங்குல நியூட்டோனியன் தொலைநோக்கி அத்தோம் மூலம் வியாழன் கோளை பார்த்துக் கொண்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அன்று மாலை வானம் மேகமூட்டமாக இருந்தது மற்றும் நட்சத்திரங்களைப் பார்ப்பதற்கு ஏற்றதாக அமையவில்லை. இந்த நிலையில் 22:39:30 UT நேரப்படி, பெரிய கிரகத்தின் பூமத்திய ரேகைக்கு அருகில் ஒரு பிரகாசமான வெள்ளை புள்ளியை அவர் கண்டார். அந்த ஃபிளாஷ் சில நொடிகளில் மறைந்துவிட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பெரேரா அதை தனது கேமராவில் பதிவு செய்தார்.பின்னர் பெரேரா, DeTeCt என்ற மென்பொருளைப் பயன்படுத்தி வீடியோவை பகுப்பாய்வு செய்தார். பதிவுசெய்யப்பட்ட ஃப்ளாஷ்களைப் பயன்படுத்தி வியாழனின் தாக்கங்களைக் கண்டறிய முயற்சித்தார். மோதலின் விளைவாக ஃப்ளாஷ்களில் அதிக நிகழ்தகவு இருப்பதாக DeTeCt மென்பொருள் பெரேராவை எச்சரித்தது. உண்மையில் வியாழன் மீது ஏற்பட்ட தாக்கத்தை தான் பதிவு செய்துள்ளோமா என்பதை உறுதி செய்ய, பெரேரா வீடியோவை டெடெக்டின் டெவலப்பருக்கு அனுப்பினார்.

Also read... காற்றால் அரிக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பு - நாசா வெளியிட்ட கண்கவர் புகைப்படங்கள்!

இவர் மார்க் டெல்க்ரோயிக்ஸ் என்ற மற்றொரு கிரக பார்வையாளர் ஆவார். சுவாரஸ்யமாக, இந்த ஃப்ளாஷ் இத்தாலி, ஜெர்மனி மற்றும் பிரான்சில் உள்ள வானியலாளர்களால் பார்க்கப்பட்டது. இதன் மூலம், இந்த ஃப்ளாஷ் பெரேராவின் தொலைநோக்கி அல்லது வேறு சில அவதானிப்பு பிழையால் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்ய முடிந்தது.ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் கூற்றுப்படி, இதுபற்றி நிறைய தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், ஃப்ளாஷ் தாக்கும் பொருள் பெரியதாகவோ அல்லது வேகமானதாகவோ அல்லது இரண்டாகவோ இருக்கலாம் என்பதைக் கண்டறிந்துள்ளனர். செப்டம்பர் 14ம் தேதி, செவ்வாய்க்கிழமை விண்வெளி ஏஜென்சியின் ஆபரேஷன் ஹாண்டில் வெளியிட்ட ஒரு ட்வீட்டில், பெரேராவின் கண்டுபிடிப்பை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளது.இந்த நிகழ்வு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, வியாழனில் ஒன்பதாவது முறையாக இதுபோன்ற தாக்கம் பதிவாகியுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதில் முதலாவது தாக்கம் 1994 இல் ஒரு தொழில்முறை வானியலாளரால் பதிவு செய்யப்பட்டது. மீதமுள்ள அவதானிப்புகள் அமெச்சூர் வானியலாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வியாழன் அதன் மிகப்பெரிய அளவு காரணமாக வேறு எந்த சூரிய மண்டலக் கோளையும் விட சிறுகோள்களால் அடிக்கடி தாக்கப்படுவதாக விண்வெளியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுவாரஸ்யமாக, வியாழன் சூரிய மண்டலத்தின் வெற்றிட சுத்திகரிப்பு கோள் என்று அழைக்கப்படுகிறது. பூமி போன்ற மேற்பரப்பு இல்லாததால், வியாழனில் விழும் இதுபோன்ற பாறைகள் மேற்பரப்பைத் தாக்காது என்றும் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: