குழந்தையை தூக்கிக்கொண்டு தாய்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த நீதிபதி! வைரலாகும் வீடியோ

இந்தக் காட்சிகள் அனைத்தும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவை லாமர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவை சுமார் 70 ஆயிரம் பேர் வரை பார்வையிட்டனர்.

  • News18
  • Last Updated: November 14, 2019, 5:05 PM IST
  • Share this:
அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் பெண் ஒருவர் வழக்கறிஞராக பதவிப் பிரமாணம் எடுக்கும்போது அவரது குழந்தையை நீதிபதி தூக்கிவைத்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

அமெரிக்காவின் டென்னிஸி மாகாண நீதிமன்றத்தின் நீதிபதியாக உள்ளார் ரிச்சர்ட் டின்கின்ஸ். அவர், ஜூலியனா லாமர் என்ற பெண்ணுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழக்கறிஞராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். அப்போது, லாமரின் கையில் குழந்தை இருந்துள்ளது. உடனே நீதிபதி குழந்தையை வாங்கி தனது கையில் வைத்துக் கொண்டு பெண்ணுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்துள்ளார்.

இந்தக் காட்சிகள் அனைத்தும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவை லாமர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவை சுமார் 70 ஆயிரம் பேர் வரை பார்வையிட்டனர். பின்னர், லாமரின் தோழி சாரா மார்ட்டின் என்பவர், அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டார். பின்னர், அந்த வீடியோவை சுமார் 7 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். அந்த வீடியோவை 10 ஆயிரம் பேர் ரீட்விட் செய்துள்ளனர். வீடியோவை பார்வையிட்ட பலரும் தலைக்கணம் இல்லாமல் குழந்தையை வாங்கி கையில் வைத்திருந்த நீதிபதிக்கு பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

Also see:

First published: November 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்