Home /News /trend /

சாலையில் குதிரை மேல் நாய் சவாரி - ரசிக்க வைக்கும் வீடியோ

சாலையில் குதிரை மேல் நாய் சவாரி - ரசிக்க வைக்கும் வீடியோ

 குதிரையின் மேல் சவாரி செய்யும்  நாய்

குதிரையின் மேல் சவாரி செய்யும் நாய்

நகரச் சாலையில் குதிரையின் மேல் அமர்ந்து குறும்புத்தனமாக நாய்க்குட்டி ஒன்று சவாரி செய்யும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    சமீப காலங்களாக சமூக ஊடகங்களில் தினந்தோறும் பல்வேறு வகையான காணொளிகள் பகிரப்படுகிறது. குறிப்பாகக் குழந்தைகளின் குறும்புத்தனம், விலங்குகள் மற்றும் நாம் வளர்க்கும் செல்லப்பிராணிகள் அடிக்கும் லூட்டிகளின் காணொளிகள் தான் இணையத்தை ஆதிக்கம் செய்துவருகிறது. இதுபோன்ற காணொளிகளைப்பார்க்கும் போது மனதிற்கு லேசாகவும், நம்மை அறியாமல் சிரிப்பை வரவழைக்கும் என்பதால் இதற்கென ரசிகர்கள் கூட்டம் உள்ளது.



     

    அந்த வகையில் தற்போது குட்டி நாய் ஒன்று குதிரையில் சவாரி செய்யும் காணொளி டிவிட்டரில் வைரலாகி வருகிறது. அந்த காணொளியில், “ குட்டி நாய் ஒன்று குதிரையின் மேல் ஜம்முன்னு அமர்ந்திருக்கிறது. இதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்காத குதிரையோ நகரம் முழுவதும் உலாவருவது“ போன்று உள்ளது. நகரை உலாவரும் போது சட்டென்று குதிரை நின்றுவிடுகிறது. என்ன? எனப் பார்க்கும்போது அங்கே ரெட் சிக்னல் போடப்பட்டுள்ளது.

    குதிரையின் மேல் நாய் அமர்ந்து செல்வதை வியப்போடு பார்த்த நெட்டிசன்களுக்கு, போக்குவரத்து சிக்னலை மதிக்கும் குதிரையைப் பார்க்கும் போது சொல்லவா வேண்டும், லைக்குகளையும், கருத்துகளையும் தெறிக்கவிடுகின்றனர். இந்த காணொளி எங்கே எடுத்தது ?என்று தெரியவில்லை.. ஆனால் இதுவரை கிட்டத்தட்ட 395.8 k பார்வையாளர்களையும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் அள்ளிக்குவித்துள்ளது.

    மேலும் இந்த காணொளியைப் பார்த்த நெட்டிசன்கள், இங்கே என்ன நடக்கிறது? என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் இந்த காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது எனவும், சுவாரசியமான காணொளி நம்மை மகிழ்விக்கிறது என டிவிட் செய்துள்ளனர். மேலும் போக்குவரத்து விதிகளை மதிக்கும் குதிரையின் பண்பும், நாய்க்குட்டியின் குறும்புத்தனமும் நிச்சயம் பார்க்கும் அனைவரையும் சிரிக்க வைத்துவிடும் எனவும் கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர்.

    இதோடு குதிரையின் மேல் நாய் அமர்ந்து சவாரி செய்யும் காட்சிகள், கடந்த 2007 ஆம் வெளியான வெல்கம் படத்திலிருந்து மஜ்னு பாய் அல்லது அனில் கபூரின் ஓவியத்தை மக்களுக்கு நினைவூட்டுகிறது எனவும் இதுபோன்ற காட்சிகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்கவைக்கும் எனவும் நெட்டிசன்கள் டிவிட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
    Published by:Janvi
    First published:

    Tags: Dog, Horse riding

    அடுத்த செய்தி