Home /News /trend /

6 மொழிகளில் செய்திகளை தொகுத்து வழங்கும் செய்தியாளர் - போர் சூழல் குறித்து விவரிக்கும் வைரல் வீடியோ

6 மொழிகளில் செய்திகளை தொகுத்து வழங்கும் செய்தியாளர் - போர் சூழல் குறித்து விவரிக்கும் வைரல் வீடியோ

செய்தியாளர்

செய்தியாளர்

உக்ரேன் தலைநகர் கிவ் நகரில் முகாமிட்டுள்ளார் பிலிஃப் க்ரோதர். ரஷியாவுக்கும், உக்ரேனுக்கும் இடையே எந்த சமயத்திலும் போர் வெடிக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

நிகழ்வுகளை உடனுக்குடன், பொதுமக்களுக்கு நேர்த்தியாக தொகுத்து வழங்கும் பணியினை செய்தியாளர்கள் மேற்கொள்கின்றனர். உள்ளூர் செய்தியாளர்களுக்கே சரியான நேரத்தில் சாப்பிடவும், தூங்கவும் நேரம் இருக்காது. அதுவே சர்வதேச செய்தியாளர்கள் என்றால், எந்த சமயத்திலும் எந்த நாட்டுக்கும் பயணம் செய்து செய்திகளை சேகரிக்க வேண்டியிருக்கும். அப்படியொரு வாழ்க்கைச் சூழலில் இருப்பவர் தான் பிலிஃப் க்ரோதர். இவர் அசோசியேட்டட் பிரஸ் என்ற சர்வதேச நியூஸ் ஏஜென்சியின் செய்தியாளராகாப் பணியாற்றி வருகிறார்.

தற்போது உக்ரேன் தலைநகர் கிவ் நகரில் முகாமிட்டுள்ளார் பிலிஃப் க்ரோதர். ரஷியாவுக்கும், உக்ரேனுக்கும் இடையே எந்த சமயத்திலும் போர் வெடிக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. உக்ரேன் எல்லையில் ஏராளமான ஆயுத தளவாடங்களையும், வீரர்களையும் ரஷியா நிறுத்தி வைத்துள்ளது.

இத்தகைய சூழலில் உக்ரேன் தலைநகரில் இருந்து போர் சூழல் குறித்த ஒவ்வொரு நகர்வுகளையும் செய்தியாக தொகுத்து வழங்கி வருகிறார் பிலிஃப் க்ரோதர். சர்வதேச ஊடகங்கள் அல்லது செய்தி ஏஜென்சிகளில் பணியாற்றும் எந்தவொரு செய்தியாளரும் மேற்கொள்ளும் வழக்கமான பணியைத் தான் பிலிஃப் க்ரோதர் செய்து வருகிறார் என்றாலும், அவரது தனித் திறமை ஒன்றின் காரணமாக தற்போது உலகெங்கிலும் அறியப்படுகிறார்.

ரஷியா - உக்ரேன் போர் நிலவரம் குறித்து செய்திகளை தொடர்ந்து படிக்கும் ஒவ்வொருவருக்கும் தற்போது பிலிஃப் குறித்து தெரிந்திருக்கும். செய்திகளை 6 மொழிகளில் தொகுத்து வழங்குகிறார் அவர். ஆங்கிலம், லக்ஸம்போர்கிஷ், ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ், பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் ஆகிய மொழிகளில் மிக சரளமாகவும், தெளிவாகவும் செய்திகளை தொகுத்து வழங்கும் பிலிஃபின் திறமை அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இதுகுறித்த வீடியோ பதிவை அவரே டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.



பிலிஃப் வாசிக்கும் செய்தியில், “டோன்பஸ் பிராந்தியத்தில் ரஷிய ஆதரவு படைகளுடன் சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. ஆனால், அதெல்லாம் ஒருபுறம் இருக்க, உக்ரேன் தலைநகர் கிவ் நகரத்தில் தொடர்ந்து அமைதியான சூழல் நிலவுகிறது’’ என்கிறார் அவர்.

பன்மொழித் திறனில் சிறந்து விளங்கும் இவரை ‘நெக்ஸ்ட் ஜேம்ஸ்ஃபாண்ட்’ என்று நெட்டிசன்கள் புகழாரம் சூட்டுகின்றனர். அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்தில் கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து பிலிஃப் பணியாற்றி வருகிறார். அதற்கு முன்பு, ‘பிரான்ஸ் 24’ என்ற நிறுவனத்தில் அவர் ஃப்ரீலான்ஸ் கரஸ்பாண்டண்ட் என்ற முறையில் 11 ஆண்டுகள் பணி செய்து வந்துள்ளார்.

Also read... பள்ளத்தில் விழுந்த யானையை வனத்துறையினர் எப்படி மீட்டிருக்காங்க பாருங்க... வைரல் வீடியோ!

லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் ஆர்ட்ஸ் என்ற பல்கலைக்கழகத்தில், ப்ராட்காஸ்ட் ஜெர்னலிஸம் என்ற பிரிவில் முதுநிலை டிப்ளமோ படிப்பை அவர் படித்துள்ளார். இதற்கு அடுத்து, லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Trending

அடுத்த செய்தி