இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை பகிர்ந்த WWE ஸ்டார் ஜான்சீனா..

கொரோனா பாதித்த பாலிவுட் பிரபலங்களின் புகைப்படங்களை தொடர்ந்து ஜான் சீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றார்.

இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை பகிர்ந்த WWE ஸ்டார் ஜான்சீனா..
இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை பகிர்ந்த ஜான் சீனா
  • Share this:
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை WWEயின் சூப்பர் ஸ்டார் ஜான்சீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

WWE யின் சூப்பர் ஸ்டார் மட்டும் அல்லது ஹாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகரான ஜான்சீனா தனது சோசியல் மீடியா பக்கத்தில் மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை எவ்வித கேப்ஷன் இன்றி பகிர்ந்துள்ளார். இதற்கு முன்னதாக நடிகர் அமிதாப் பச்சன் அவரது மகனான நடிகர் அபிஷேக் பச்சன் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

 

 
View this post on Instagram

 

A post shared by John Cena (@johncena) on


 

  
View this post on Instagram

 

A post shared by John Cena (@johncena) on


நடிகர் அமிதாப் பச்சன் அவரது மகனான நடிகர் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு சில நாட்களுக்கு முன்னர் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அபிஷேக் பச்சனின் மனைவியான முன்னாள் உலக அழகி நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கும், அவர்களது மகளுக்கும் கொரோனா பாதித்தது.

எனினும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் சிகிச்சையில் இருந்தனர். இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விதம் கொரோனா பாதித்த பாலிவுட் பிரபலங்களின் புகைப்படங்களை தொடர்ந்து ஜான் சீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றார்.
First published: July 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading