திரைப்படங்களில் வருகின்ற கதையை போலவே நிஜ வாழ்க்கையில் நடந்தால் அது மிக அதிர்ச்சியானதாகவும், ஆச்சரியத்தை தர கூடியதாகவும் இருக்கும். இப்படியொரு சம்பவம் தான் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள லோஹர்டகா மாவட்டத்தைச் சேர்ந்த அமன் என்பவரின் வாழ்க்கையில் நடந்துள்ளது.
சமீபத்தில் வெளியான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் ஹீரோ கதாபாத்திரத்தை போலவே இவரின் வாழ்க்கையிலும் இரண்டு காதல் மலர்ந்துள்ளது.
இவருக்கு இரண்டு பெண்களையும் பிடித்துள்ளதால், இவர்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த கதை கேட்கும் போது யாருக்காக இருந்தாலும் ஆச்சரியமாக இருக்கும். இவர் அந்த இரண்டு பெண்களையும் நேசித்ததால் அவர்கள் இருவரையும் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் இல்லாமல் அவரால் வாழ முடியாது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் இப்படியொரு கதை அம்சம் தான் இருக்கும்.
குசும் லக்ரா மற்றும் ஸ்வாதி குமாரி ஆகிய இரு பெண்களும் சந்தீப் ஓரான் என்ற ஆணை விரும்பி உள்ளனர். இவர்கள் இருவர் மீதும் சந்தீப்பிற்கு அன்பும் அக்கறையும் ஒரே சேர இருந்துள்ளது. எனவே லோஹர்டகாவின் பண்டாரா தொகுதியில் உள்ள பண்டா கிராமத்தில் இவர்கள் மூவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் சந்தீப்பை திருமணம் செய்து கொள்வதிலும் எந்த பிரச்சனையும் இல்லை என்பது தான் இந்த சம்பவத்தில் உள்ள திருப்பமே.
‘என் கணவர் ஆண் இல்லை’ 10 மாதங்களுக்குப் பிறகு மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!
இருப்பினும், இந்தியாவில் திருமணச் சட்டங்களின்படி, இருதார மணம் சட்டவிரோதமானது மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 494 இன் கீழ் இது தண்டனைக்குரியது. இதற்கு முன்னர் சந்தீப் மற்றும் குசும் மூன்று ஆண்டுகளாக லிவ்-இன் உறவில் இருந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. ஓராண்டுக்கு முன்பு சந்தீப் மேற்கு வங்கத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலைக்குச் சென்றபோது அங்கு சுவாதி குமாரியைச் சந்தித்துள்ளார். அப்போது சுவாதியும் சந்தீப் பணிபுரிந்த அதே பணியிடத்தில் சம்பாதிக்க சென்றுள்ளார். அங்கு மலர்ந்த காதல் அவர்கள் வீடு திரும்பிய பிறகும் தொடர்ந்தது.
இருவரும் ஒருவரையொருவர் தொடர்ந்து சந்தித்து வந்தனர். இறுதியில், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் இவர்களின் உறவைப் பற்றி அறிந்து கொண்டனர். பலவித சண்டைகளுக்கு பிறகு அந்த கிராம மக்கள் பஞ்சாயத்து கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். அதன்படி, சந்தீப் இருவவரையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பஞ்சாயத்து கமிட்டி முடிவு செய்தது. இந்த முடிவிற்கு அவர்களது குடும்பத்தினரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
இந்த திருமணம் குறித்து சந்தீப்பிடம் கேட்ட போது, 'இந்த திருமணத்தில் சட்டச் சிக்கல்கள் இருக்கலாம், ஆனால் தான் இருவரையும் காதலிப்பதாகவும், இருவரையும் விட்டுவிட முடியாது" என்றும் கூறினார். இதேபோன்ற ஒரு சம்பவம் ஒரு வருடத்திற்கு முன்பு, சத்தீஸ்கரின் பஸ்தாரில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்தது. அதிலும் ஒரு ஆண் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மணந்தார். அதிலும் பல சிக்கல்களுக்கு பிறகு மூவருமாக திருமணம் செய்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.