• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • Fact Check : ஜார்க்கண்டில் ஏலியனா? வைரல் வீடியோவின் பின்னணி!

Fact Check : ஜார்க்கண்டில் ஏலியனா? வைரல் வீடியோவின் பின்னணி!

ஜார்க்கண்டில் ஏலியன்

ஜார்க்கண்டில் ஏலியன்

கடைசியாக இப்போது உண்மை வெளியாகியிருக்கிறது. சாலையில் தோன்றியது ஏலியன் இல்லை. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நிர்வாணமாக நடந்து சென்றுள்ளார்.

  • Share this:
ஜார்க்கண்டில் ஏலியன் என சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவிய நிலையில், அது பெண் ஒருவர் நிர்வாணமாக நடந்து சென்றது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வித்தியாசமான உருவம் ஒன்று நடந்து செல்லும் வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக வைரலாக பரவியது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் பகுதியில் எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட அந்த வீடியோவில், இளைஞர்கள் பைக்கில் சென்று கொண்டிருக்கின்றனர்.

திடீரென அவர்களுக்கு எதிரே சாலையில் வித்தியாசமான உருவம் ஒன்று செல்கிறது. பார்ப்பதற்கு ஏலியன் போல தோன்றும் அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. ஹசாரிபாக்கில் ஏலியன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் உண்மைத்தன்மையை கண்டுபிடிக்க வேண்டும் என சில நெட்டிசன்கள் கோரிக்கை வைக்கத் தொடங்கினர். அமெரிக்காவின் நாசா மையத்துக்கும் வீடியோவை டேக் செய்தனர்.

ALSO READ  | கான்ஜுரிங் திகில் படம் எடுக்க காரணமான நிஜ பண்ணை வீட்டில் தொடரும் அமானுஷ்யங்கள்!

கடைசியாக இப்போது உண்மை வெளியாகியிருக்கிறது. சாலையில் தோன்றியது ஏலியன் இல்லை. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நிர்வாணமாக நடந்து சென்றுள்ளார். அந்தவழியாக சாலையில் சென்றவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், அந்த வீடியோ எடுக்கப்பட்டது ஹசாரிபாக்கில் இல்லை. கர்சாவான் மாவட்டத்தில் உள்ள செரைகேலா பகுதி சாலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 



 

 



 

 



 

வீடியோவை பதிவு செய்த இரண்டு இளைஞர்களில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பெயர் தீபக். இது குறித்து விளக்கம் அளித்துள்ள தீபக், சக்ராதர்பூரில் நடந்த இறுதிச் சடங்கு ஒன்றில் கலந்து கொண்டபிறகு செரைகலாவுக்கு கர்சாவான் வழியாக வந்து கொண்டிருந்தாக தெரிவித்துள்ளார். வரும் வழியில் வீடியோ பதிவு செய்து கொண்டு வந்ததாகவும், அப்போது ஒரு பாலத்தின் அருகில் வித்தியாசமான உருவம் எதிரே நடந்து செல்வதைக் கண்டு பயந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

ALSO READ  |  ஆண்களுக்கே டஃப் கொடுக்கும் "பாடிபில்டர் கங்காரு" - வைரலாகும் வீடியோ!

முதலில், பேய்!..பேய் என தாங்கள் அலறியதாக குறிப்பிட்டுள்ள அவர், பின் அது ஒரு பெண் என அடையாளம் கண்டுகொண்டதாக தெரிவித்தார். தங்களைப் போலவே அந்த வழியில் சென்ற பலரும் பயந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

 



 



உண்மையான வீடியோ 1.30 நொடிகள் இருக்கும் நிலையில், சமூகவலைதளங்களில் வெறும் 30 நொடி வீடியோ மற்றும் உலாவி வருகிறது. ஹசாரிபாக் பகுதியைச் சேர்ந்த சவுரவ் அனுராக், சமூகவலைதளங்களில் குறிப்பிடப்பட்ட பகுதிக்கு நேரடியாக சென்று பார்த்துள்ளார்.

ALSO READ  |  'வெளியானது சமந்தாவின் சர்ச்சை படம்... பருத்தி வீரன் நாயகிக்கு குவியும் வாழ்த்து' மனதை விட்டு நீங்காத SPB - இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங் இவை தான்!

வீடியோவில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடமும், ஹசாரிபாக் இடத்துக்கும் தொடர்பில்லை எனக் கூறிய அவர், செரைகலா பகுதியில் பதிவு செய்யப்பட்ட வீடியோ என்பதை அவரும் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், காவல்துறையினரும் இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 

இரவு நேரத்தில் நிர்வாணமாக நடந்து சென்ற பெண் யார்? எதற்காக நிர்வாணமாக நடந்து சென்றார்? மனநிலை பாதிக்கப்பட்டவரா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். வீடியோவின் உண்மைத் தன்மை தெரிந்த பிறகே குழப்பம் தீர்ந்துள்ளதாக நெட்டிசன்கள் சிலர் கூறியுள்ளனர்.

 



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: