நேருவுக்காக தனி விமானத்தில் சிகரெட் எடுத்து வரப்பட்டது - பா.ஜ.க. குற்றச்சாட்டு

நேருவுக்காக தனி விமானத்தில் சிகரெட் எடுத்து வரப்பட்டது - பா.ஜ.க. குற்றச்சாட்டு

ஜவஹர்லால் நேரு

போபால் ஆளுநர் விநாயக் படாஸ்கர் எழுதிய குறிப்பை மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்துக்காக பா.ஜ.க கையில் எடுத்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
போபால் சென்ற முன்னாள் பிரதமர் நேருவுக்கு சிகரெட் எடுத்துவர இந்தூருக்கு தனி விமானம் அனுப்பி வைக்கப்பட்டதாக, போபால் ஆளுநர் விநாயக் படாஸ்கர் எழுதிய குறிப்பை மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்துக்காக பா.ஜ.க கையில் எடுத்துள்ளது.

தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலையொட்டி பா.ஜ.க மூத்த தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, மேற்குவங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் அம்மாநிலத்தில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர் விஷ்வாஸ் சாரங் (Vishwas Sarang) தெரிவித்துள்ள கருத்து ஒன்று தேர்தல் களத்தில் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

மேற்குவங்கத்தில் பா.ஜ.கவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள கிளம்பிய அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு பிடித்தமான 555 சிகரெட்டை கொண்டு வருவதற்காக போபாலில் இருந்து இந்தூருக்கு தனி விமானம் அனுப்பி வைக்கப்பட்டதாக, அப்போதைய போபால் ஆளுநராக இருந்த விநாயக் படாஸ்கர் எழுதிய ராஜ்பவன் குறிப்பை மேற்கோள்காட்டி காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார். அதாவது, விநாயக் படாஸ்கர் (Vinayak Pataskar) எழுதிய போபால் ராஜ்பவன் குறிப்பில், அரசுமுறை பயணமாக பிரதமர் நேரு போபால் வந்ததாகவும், அப்போது உணவுக்குப் பிறகு அவர் குடிக்கும் பிடித்தமான சிகரெட் ராஜ்பவனில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் பதறிப்போன ராஜ்பவன் ஊழியர்கள், நேருவுக்கு பிடித்த 555 சிகரெட்டை எடுத்துவர தனி விமானம் ஒன்றை இந்தூருக்கு அனுப்பி, அங்கிருந்து சிகரெட்டை கொண்டுவந்து பிரதமர் நேருவுக்கு கொடுத்தாக பதிவு செய்துள்ளார். இதனை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியை விமர்சித்த மத்திய பிரதேச அமைச்சர் விஷ்வாஸ் சாரங், காந்தியின் பெயரை மட்டும் எடுத்துக்கொண்டு அவரது கொள்கையை இம்மியளவும் நேரு குடும்பத்தினர் கடைபிடிப்பதில்லை என்றும் சாடினார்.

Also read... பூமியில் வேகமாக குறைந்து வரும் ஆக்ஸிஜன் - உயிர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பு!

நேருவின் உடைகள் லாண்டரிக்காக பாரீஸ் அனுப்பப்பட்டதாக தாங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருப்பதாக கூறிய அவர், காந்திய வழி எனக் கூறிக்கொள்ளும் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் நேருவைப் போல் ஆடம்பர வாழ்க்கையை மட்டுமே வாழ்வதாகவும் விமர்ச்சித்தார். காங்கிரஸில் இருக்கும் தலைவர்களும் காந்தியின் கொள்கைகளை பின்பற்றுவத்தில்லை என்றும் விஷ்வாஸ் சாரங் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சி, பிரதமர் நேரு இந்தியாவுக்கு விடுதலையை பெற்றுக்கொடுத்து, ஜனநாயகத்தை நிலைநாட்டிக் கொண்டிருந்தபோது பா.ஜ.க என்ற ஒரு கட்சி வரலாற்றில் இல்லை என்பதும் மக்களுக்கு தெரியும் என கூறியுள்ளது. அம்மாநிலத்தின் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஜெய்வர்தன் சிங் 9Jaivardhan Singh) பேசும்போது, மக்களை திசைதிருப்பும் நடவடிக்கையில் பா.ஜ.க இறங்கியிருப்பதாக குற்றம்சாட்டினார். இதுகுறித்து அம்மாநில கவர்னரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: