Home /News /trend /

ஜப்பானின் ‘கில்லிங் ஸ்டோன்’ இரண்டாகப் பிளந்து விஷ வாயுவை வெளியேற்றுவதாக மக்கள் பீதி!

ஜப்பானின் ‘கில்லிங் ஸ்டோன்’ இரண்டாகப் பிளந்து விஷ வாயுவை வெளியேற்றுவதாக மக்கள் பீதி!

கில்லிங் ஸ்டோன்

கில்லிங் ஸ்டோன்

Japan Myths | ஜப்பானில் கடந்த 1000 ஆண்டுகளாக பேய் போன்ற தீய சக்திகளை அடக்கி வைத்திருப்பதாக நம்பப்பட்டு வந்த 'Sessho-seki'  எனப்படும் கில்லிங் ஸ்டோன் இரண்டாக உடைந்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஜப்பானில் கடந்த 1000 ஆண்டுகளாக பேய் போன்ற தீய சக்திகளை அடக்கி வைத்திருப்பதாக நம்பப்பட்டு வந்த 'Sessho-seki' எனப்படும் கில்லிங் ஸ்டோன் இரண்டாக உடைந்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான பழக்க வழக்கங்கள் இருப்பது போல், நம்பிக்கைகள் மற்றும் மூட நம்பிக்கைகள் உண்டு. அதிலும் ஜப்பானிய மக்கள் பழமையான சடங்குகள், பழக்க வழக்கங்களை இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர். முன்னோர்கள் கூறிய பல கட்டுக்கதைகளை நம்புவது, பின்பற்றுவது போன்ற பல விநோதமான பழக்கங்களை அவர்களிடம் காண முடியும். தற்போது ஜப்பானில் இருந்து புறப்பட்டுள்ள பேய் கதை ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

2022-ம் ஆண்டு ஆரம்பித்ததில் இருந்தே கொரோனா, ரஷ்யா - உக்ரைன் போர், பொருளாதார சீர்குலைவு என மக்கள் அடுத்தடுத்து துன்புறுவது போதாது என ஜப்பானில் இருந்து புதிதாக ஒரு திகில் கதை கிளப்பி மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஜப்பானில் தன் அருகில் வருபவர்களை கொன்றுவிடும் என நம்பப்படும் 'கொலைக்கல்' பாதியாகப் பிளந்தது இணையத்தில் புதுப்புது கருத்துக்களை உலவ வைத்திருக்கிறது.

அந்நாட்டு புராணங்களின் படி, இந்த கொலைக் கல் அல்லது ‘செஸ்ஷோ-செகி’-யில் 1107-1123 வரை ஆட்சி செய்த பேரரசர் டோபாவை கொல்லும் சதி திட்டத்தில் ஒருபகுதியாக செயல்பட்ட தமாமோ-நோ-மே என்ற அழகான பெண்ணின் சடலத்தின் பாகம் அந்த கல்லில் கலந்துள்ளதாக நம்பப்படுகிறது. அந்த பெண் ஒரு தீய சக்தி என்றும், ஒன்பது வால் கொண்ட நரியான அவளது ஆவியை இந்த எரிமலைக் கல்லில் கட்டிவைத்ததாகவும் நம்பிக்கைகள் உலவுகின்றன. டோக்கியோவிற்கு அருகிலுள்ள டோச்சிகி மாகாணத்தில் உள்ள சூடான நீரூற்றுக்குள் கொல்லும் கல் இருப்பதாக கூறப்படுகிறது. புத்த துறவி ஒருவர் அந்த கல்லை சிதறடித்து பேய் ஓட்டியதாகவும், கல்லை அழித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இன்று வரை ஜப்பான் மக்கள் அந்த ஆவி, நாசு மலையின் சரிவுகளை சுற்றி வட்டமிட்டு வருவதாக நம்புகின்றனர்.

Also read... 7 நூற்றாண்டுகளாக மதுவிலக்கை கடைப்பிடித்து வரும் கிராமம் - யாருமே மது அருந்துவது கிடையாதாம்

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த எரிமலை பகுதியில் உள்ள கல் இரண்டு சம அளவிலான துண்டுகளாக உடைந்துள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நாட்டுப்புற கதைகளின் படி, இந்த பிளவுபட்ட கல் தொடர்ந்து விஷவாயுவை வெளியேற்றும் எனக்கூறப்பட்டுள்ளதால், இது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான போட்டோக்களை ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட சிலர் 2022ம் ஆண்டு அதன் வேலையை தீவிரமாக காட்டி வருவதாக கவலை தெரிவித்துள்ளனர். சிலரோ பேய் பற்றிய கட்டுக்கதையை நம்பாமல் வழக்கம் போல் காமெடியாக கருத்து பதிவிட்டு வருகின்றனர். எது எப்படியோ ஜப்பானின் ‘கொலைக்கார கல்’ இணையவாசிகளுக்கு இன்னொரு பொழுதுபோக்காக மாறியுள்ளது.

தமாமோ-நோ-மேயின் ஆவி கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகளுக்குப் பிறகு உயிர்த்தெழுப்பப்பட்டதாக மற்றவர்கள் ஊகித்தாலும், பல ஆண்டுகளுக்கு முன்பு பாறையில் விரிசல் தோன்றியதாகவும், அதன் மூலம் மழைநீர் ஊடுருவி ஏற்பட்ட பாதிப்பே கல் உடையக் காரணம் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Japan

அடுத்த செய்தி