மிஷன் போகிமான் தோல்வி - திருடன் சிக்கியது எப்படி?

மிஷன் போகிமான் தோல்வி - திருடன் சிக்கியது எப்படி?

மாதிரி படம்

பெற்றோருக்கு தெரியாமல் பணத்தை எடுத்து அந்த கேம்களின் அடுத்த லெவலுக்கு செல்வதற்காக பயன்படுத்தினர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
போகிமான் (pokemon) வர்த்தக அட்டைகளை திருடி கடனை அடைக்க முயற்சி செய்த ஜப்பானியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொரோனா காலத்தில் வீட்டிலேயே முடங்கி கிடந்த மக்களுக்கு ஆறுதலாக வீடியோ கேம்கள் இருந்தன. ப்ரீ பையர், பப்ஜி மற்றும் போக்மேன் உள்ளிட்ட விளையாட்டுகளில் மூழ்கி திளைத்தனர். அந்த வீடியோ கேம்களுக்கு அடிமையான பல சிறுவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளானதுடன், தற்கொலை முடிவுகளையும் எடுத்தனர். சிலர் பெற்றோருக்கு தெரியாமல் பணத்தை எடுத்து அந்த கேம்களின் அடுத்த லெவலுக்கு செல்வதற்காக பயன்படுத்தினர். இந்நிலையில், ஜப்பானிய இளைஞர் ஒருவர் போகிமான் வர்த்தக அட்டைகளை திருடி, மாட்டிக்கொண்டுள்ளார். தனக்கு ஏற்பட்ட கடனில் இருந்து தப்பிப்பதற்காக அந்த அட்டைகளை திருடியதாகவும் விளக்கமளித்துள்ளார்.

கென்சுகே நகனிஷியுஸ் (Kensuke Nakanishiused) என்ற 28 வயது இளைஞர் டோக்கியோவில் உள்ள ஐ.டி கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார். கொரோனா காலத்தில் நிதி நெருக்கடியை சந்தித்த அவர், தனக்கு ஏற்பட்ட கடனில் இருந்து தப்பிக்க வழிதேடியுள்ளார். அப்போது, ஜப்பான் முழுவதும் போகிமான் வீடியோ கேம் பிரபலமாக இருந்ததால், அந்த கேமின் வர்த்தக அட்டைகளுக்கு டிமாண்ட் இருப்பதை உணர்ந்தார். அதனால், போக்மேன் அட்டைகளை எப்படியாவது கைப்பற்றி விற்பனை செய்தால் தனது கடனை அடைத்து விடலாம் என முடிவு செய்த அவர், கடை ஒன்றில் திருட முடிவெடுத்துள்ளார்.

அதன்படி, இகிபுகுரோ (Ikebukuro) நகரில் உள்ள போகிமான் கடையில் திருடுவதற்கு கென்சுகே திட்டமிட்டுள்ளார். 6 மாடி கட்டடத்தில் இருந்த அந்தக் கடைக்கு, பில்டிங்கின் மேற்புறத்தில் இருந்து கயிற்றின் மூலம் இறங்கியுள்ளார். கடையின் ஜன்னல் அருகே வந்தவுடன் அதனை உடைத்து கடைக்குள் சென்ற கென்சுகே, போகிமான் வர்த்தக அட்டைகள் மற்றும் வீடியோ கேம் சாதனங்கள் உள்ளிட்டவற்றை திருடியுள்ளார். ஜப்பானிய ரூபாயில் 3 லட்சம் யென்களையும், 80 போகிமேன் கார்டுகள் ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளார். இதனையறிந்த கடை உரிமையாளர் காவல்துறையில் புகார் அளித்தார்.

Also read... வீட்டில் இருந்து பார்சல் கவரை திருடி செல்லும் அணில் - வைரல் வீடியோ!

இதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கென்சுகேவை கைது செய்தனர். அவர் திருடியதற்கான காரணம் குறித்து கென்சுகேவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, தனக்கு அதிகப்படியான கடன் ஏற்பட்டதாகவும், அதில் இருந்து விடுபடுவதற்கு அதிக டிமாண்ட் இருந்த போகிமான் வர்த்தக அட்டைகளை திருட முடிவெடுத்தாகவும் கூறியுள்ளார்.

விசாரணையில் கென்சுகே பள்ளிப்பருவத்தில் இருந்து மலையேற்றத்தில் பயிற்சி பெற்றவராக இருந்துள்ளார். அதனால், எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், கயிற்றை மட்டுமே கொண்டு இந்த கொள்ளையை அரங்கேற்றியுள்ளார். போகிமான் வர்த்தக அட்டைகளுக்கு ஜப்பானில் மிகப்பெரிய டிமாண்ட் இருகிறது. Shadowless” Charizard, “PSA 10 Gem Mint கார்டுகள் இ பேயில் 3,11,800 டாலர்களுக்கு அண்மையில் விற்பனையானது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: