Home /News /trend /

ஆணியே இல்லாமல் 100 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட மரவீடு.. தச்சுத் தொழிலின் பிரமிப்பு என நெட்டிசன்கள் பெருமிதம்!

ஆணியே இல்லாமல் 100 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட மரவீடு.. தச்சுத் தொழிலின் பிரமிப்பு என நெட்டிசன்கள் பெருமிதம்!

ஜப்பானில் கட்டப்பட்ட மர வீடு

ஜப்பானில் கட்டப்பட்ட மர வீடு

மரத்தினால் மட்டும் கட்டப்படும் இந்த வீடுகள் வியப்பையும், பிரமிப்பையும் ஏற்படுத்துகிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Interna, IndiaJapanJapanJapanJapanJapanJapan
    ஒருவருக்கு வீடு கட்டுவது என்பது மிகப்பெரிய கனவாக இருக்கும். ஆனால் சிமெண்ட், ஜல்லி, கம்பி , மணல் போன்ற கட்டுமானப் பொருள்களின் விலையைக் கேட்டாலே வீடு கட்டும் ஆசையே வராது. அந்தளவிற்கு நாளுக்கு நாள் கட்டுமானப் பொருள்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் தான் பெரிய கான்கிரீட் அடுக்குகள் எதுவும் இல்லாமல் குறைந்த பட்ச பொருள்களைப் பயன்படுத்தும் பழைய தொழில்நுட்பம் இன்றும் செயல்பட்டு வருகிறது.

    குறிப்பாக ஜப்பானில் Miyadaiku என்ற தச்சுத் தொழில் மிகவும் பிரபலமானதோடு எவ்வித மின்சாரக் கருவிகள் எதுவும் பயன்படுத்தாமல் மரம் மற்றும் சுத்தியல் போன்ற பொருள்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்றைத் தான் @historydefined என்ற டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், ஜப்பானில் பெரிய வீடுகள் மரம் மற்றும் சுத்தியல் போன்ற எளிய கருவிகளைப் பயன்படுத்திக் கட்டப்படுவதைக் காட்டுகிறது. மேலும் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த நடைமுறை மிகவும் பிரபலமானதாக இருந்தது என்றும் டிவிட்டர் வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    தற்போது பெரிய பெரிய மிசின்களின் உதவியோடு வீடுகள் கட்டப்பட்டு வரும் நிலையில் , எளிமையாக மரத்தினால் எப்படி பெரிய வீடுகள் கட்டப்படுகிறது? என்பது குறித்த இந்த வீடியோவை இதுவரை 2.6 மில்லியன் நெட்டிசன்கள் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் இதுக்குறித்த பல கருத்துக்களையும் பகிர்ந்துள்ளனர்.

    Also Read : மது குடிப்பதை எப்படி அதிகப்படுத்துவது? ஜப்பானின் அடுத்த அதிர்ச்சி ஐடியா

    குறிப்பாக “ மரவேலை பற்றிய இந்த அறிவு எப்படி அவர்கள் தெரிய வந்தது? இதுபோன்றவற்றை உருவாக்க கைக் கருவிகளைப் பயன்படுத்தும் திறமையைப் பார்க்கும் போது நிச்சயம் மனதைக் கொள்ளைக் கொள்கிறது என கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். மேலும் இந்த நுட்பம் முக்கியமாக மியாடைகு எனப்படும் தச்சர்களால் பயன்படுத்தப்படுகிறது. கோவில்கள் மற்றும் கோவில்களில் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பம். நிச்சயமாக, ஜப்பானிய தச்சர்கள் இந்த கட்டுமான முறையின் ஒரு பகுதியை பெற்றுள்ளதாகவும் இந்தியாவில் பல மில்லியன் ஆண்டுகளாக பல கிராமங்களில் மரத்தினால் ஆன வீடுகளில் கட்டப்பட்டுள்ளது என்பதையும் டிவிட்டரில் நெட்டிசன்கள் சுட்டிக் காட்டியுள்னர்.

    மேலும் மரத்தினால் மட்டும் கட்டப்படும் இந்த வீடுகள் வியப்பையும், பிரமிப்பையும் ஏற்படுத்துகிறது எனவும் நிச்சயம் இத்தொழிலைப் பாராட்டியே ஆக வேண்டும் என்பது போன்ற கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

    பொதுவாக அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும், ஒரு வேளை பாதிப்பு ஏற்பட்டால் மரத்தினால் செய்யப்பட்ட வீடுகள் அதிக பொருள்செலவை மீண்டும் தருவதில்லை என்ற எண்ணத்தில் இதுப்போன்ற மர வீடுகள் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Houses Built project, Japan, Trending Video

    அடுத்த செய்தி