ஜப்பானின் மிகப்பெரிய கோடீஸ்வரரான யுசாகூ மேசவா தான் மேற்கொள்ளவிருக்கும் நிலவுப் பயணத்துக்கு தன்னுடன் இணைந்து வர தோழி ஒருவரைத் தேடி வருகிறார்.
ஜப்பானின் மிகப்பெரும் ஆன்லைன் ஃபேஷன் நிறுவனத்தின் தலைவராக யுசாகூ இருக்கிறார். மக்களுக்குப் பணம் மகிழ்ச்சியை அளிக்குமா என்பதைக் கண்டறிய தனது ட்விட்டர் பக்கத்தை பின் தொடருவோருக்கு கோடிகளை அள்ளி வீசினார். தனது ட்விட்டர் ரசிகர்கள் 100 பேருக்கு சுமார் 65 கோடி ரூபாயைப் பகிர்ந்து அளித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் முதன்முறையாக SpaceX திட்டத்தை அறிவித்த போது நிலவுக்குச் செல்ல விண்பித்தவர் யுசாகூ. நிலவுக்கான பயணம் தொடங்கும் எனில் அதன் முதல் பயணி ஆக யுசாகூ தான் இருப்பார். இதற்காக இவர் ஓராண்டுக்கு முன்னரே முன்பதிவு செய்துள்ளார்.
ஆனால், தான் நிலவுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது தனக்கு துணையாக ஒரு தோழி வேண்டும் என நினைத்த யுசாகூ அதற்கான தேடுதல் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறார். ஆண்டுதோறும் தனது ட்விட்டர் ரசிகர்களுக்கு கோடி கணக்கில் ரூபாய் ஆகப் பரிசளிப்பதை தொடர்ந்து வருகிறார் யுசாகூ.
மேலும் பார்க்க: இசையில் உலக சாதனை படைத்த துபாய்வாழ் இந்தியப் பெண்..!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.