• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • ஊழியர்கள் வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்தால் போதும் - புதிய திட்டம் பரிந்துரை

ஊழியர்கள் வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்தால் போதும் - புதிய திட்டம் பரிந்துரை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஊழியர்களின் நலனை மனதில் கொண்டு ஜப்பான் அறிவித்துள்ள இந்த புதிய கொள்கையில் சில குறைபாடுகளும் இருக்கின்றன.

  • Share this:
    கடுமையான உழைப்பிற்கு பெயர் பெற்ற நாடுகளில் ஒன்று ஜப்பான். இதனிடையே அந்நாட்டில் இருக்கும் நிறுவனங்களின் வேலை நாட்களைக் குறைக்க ஜப்பானின் புதிய பொருளாதாரக் கொள்கை வழிகாட்டுதல் பரிந்துரை செய்துள்ளது. பெரும்பாலும் வாரத்தில் 5 அல்லது 6 நாட்கள் வேலைநாட்களாக இருக்கும் நிலையில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலைநாட்களாக அமல்படுத்த இந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறந்த வொர்க்-லைஃப் பேலன்ஸிற்கு இந்த வார வேலைநாட்கள் குறைப்பு உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது மக்கள் தங்கள் அலுவலக வாழ்க்கையிலிருந்து வெளியேறி, அவர்கள் நிதானமான செயல்களில் ஈடுபட ஊக்குவிக்கும். இந்த முறை நடைமுறைக்கு வந்தால் அது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் கடந்த வாரம் இறுதி செய்தார். இந்த திட்டம் குறிப்பாக தங்கள் குடும்பங்களை கவனித்துக் கொள்ள வேண்டிய அல்லது புதிய விஷயங்களை கற்று கொள்ள விரும்பும் நபர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுவதாக கூறினார்.

    தற்போதைய 5 நாள் வேலை வாரத்திற்கு (work week) பதிலாக 4 நாள் வேலை வாரத்தை அமல்படுத்துமாறு நிறுவனங்களை வலியுறுத்தும் திட்டங்களை ஜப்பான் அறிவித்துள்ள நிலையில், இந்த யோசனையின் முக்கிய நோக்கம் ஊழியர்களின் உற்பத்தி திறனை மேம்படுத்துவதாக உள்ளது. ஆனால் கூடுதல் விடுமுறை நாட்களில் செய்யாத வேலைகளை ஈடு செய்யும் அளவிற்கு "4 வேலைநாட்கள்" இருக்குமா, தொழிலாளர்களின் உற்பத்தி திறன் அதற்கேற்றவாறு இருக்குமா என்ற சந்தேகம் முதலாளிகளுக்கு எழுந்துள்ளது.

    Also Read : தமிழகத்தில் 21 மாவட்டங்களில்  100 ரூபாயை கடந்த பெட்ரோல் விலை

    கொள்கை என்ன?

    ஜப்பானில் தற்போது நிலவி வரும் தொழிலாளர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இந்த கொள்கை செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஜப்பானின் முக்கிய செய்தித்தாள்களில் ஒன்றான தி மெய்னிச்சி (The Mainichi) குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக சில தகவல்களை வெளிப்படுத்தி உள்ள மெய்னிச்சி இழந்த வேலை நாளுக்கு ஈடுசெய்யும் அளவுக்கு உற்பத்தித்திறன் அதிகரிக்குமா என்ற நிறுவனங்களின் சந்தேகத்தையும், மறுபுறம் ஒரு நாள் குறைவாக வேலை செய்வார்கள் என்பதால் ஊதிய குறைப்பு குறித்து ஊழியர்களின் அச்சத்தையும் பதிவு செய்துள்ளது.

    இந்த புதிய வார வேலைநாள் கொள்கை காரணமாக குடும்ப பராமரிப்பு பொறுப்பு உள்ளவர்கள் தங்கள் வேலையை விட்டு வெளியேற வேண்டிய சூழலை தவிர்ப்பது, மற்றும் தொடர்ச்சியான கல்வி மேம்படுத்துதலில் ஈடுபட நினைப்பவர்களுக்கு நன்மை மற்றும் அதிகமான மக்கள் பொருளாதாரத்திற்காக பகுதிநேர வேலைகளை பார்க்க உதவுவது உள்ளிட்ட பல நன்மைகள் ஊழியர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மெய்னிச்சி செய்திநிறுவனம் கூறி உள்ளது.

    மரணத்தை குறைக்க உதவும் :

    பொதுவாக ஜப்பானியர்கள் நீண்ட நேரம் கடுமையாக உழைக்க கூடியவர்கள் என்று அறியப்படுபவர்கள். உண்மையில், அதிகப்படியான வேலை நேரத்தால் நோய் அல்லது மரணம் என்று பொருள்படும் ‘கரோஷி’ என்ற சொல் 1970-களில் இருந்து அந்நாட்டில் புழக்கத்தில் உள்ளது. எனவே நிறுவனங்கள் இந்த புதிய குறுகிய வேலை வார கொள்கையை ஏற்று கொள்வதற்கான பரிந்துரை ஜப்பானின் மக்கள் தொகை சுருங்குவதை கட்டுப்படுத்தவும் தான் என்று கூறப்படுகிறது. அதிக வேலைப்பளுவால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் இறப்புகளை குறைக்க இந்த புதிய திட்டம் பெரிதும் உதவும் என்றும் கூறப்படுகிறது.

    Also Read : நினைத்த தேதியில் குழந்தை பெற்றெடுக்க விரும்பும் பெற்றோர்... கடிவாளம் போட்ட அமைச்சர மா.சுப்பிரமணியன்

    ஊழியர்களின் நலனை மனதில் கொண்டு ஜப்பான் அறிவித்துள்ள இந்த புதிய கொள்கையில் சில குறைபாடுகளும் இருக்கின்றன. நாம் ஏற்கனவே கூறியபடி நாடு ஏற்கனவே தொழிலாளர் பற்றாக்குறையை சந்தித்து வரும் நிலையில், குறைவான வேலை வாரம் என்பது ஊழியர்களின் ஊதியத்தை குறைப்பதற்கு காரணமாகி விடும் என்று அஞ்சப்படுகிறது. ஒருவேளை அரசின் புதிய வேலை வார கொள்கையை செலக்ட் செய்யும் ஊழியர்கள் மீது நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் அக்கறை இல்லை அல்லது முழுமையானகவனம் செலுத்தவில்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் நிர்வாகத்தால் சுமத்தப்படலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: