ஜப்பானில் திருமணமான பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண்ணுக்கு ரூ.70000 அபராதம்!

மாதிரி படம்

திருமணமான பெண்ணின் கணவர், தன் மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு எதிரான டோக்கியோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஜப்பானில் மனைவியுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண்ணுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கணவருக்கு ரூ.70 ஆயிரம் வழங்க ஜப்பான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜப்பானில் திருமணமான பெண் ஒருவருடன், மற்றொரு பெண் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். இதனையறிந்த திருமணமான பெண்ணின் கணவர், தன் மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு எதிரான டோக்கியோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், தன்னுடைய மனைவியுடன், தனக்கு தெரியாமல் தொடர்பில் பெண் ஒருவர் இருந்ததாகவும், அவர் உடலுறவில் ஈடுபட்டது தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், மனைவிக்கும், தனக்கும் இடையே எந்தப் பிரச்சனையும் இல்லை எனத் தெரிவித்த அவர், நாங்கள் சேர்ந்து வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

விவகாரத்து பெறாத நிலையில், தன் மனைவியுடன் அந்த பெண் உடலுறவில் ஈடுபட்டதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என 39 வயதான அந்த நபர் தெரிவித்துள்ளார். மகிழ்ச்சியாக வாழ்ந்த குடும்பத்தில் அந்தப் பெண் இடையில் புகுந்து பிரச்சனைகளை ஏற்படுத்தி வருவதாகவும், மனைவியை தவறாக பயன்படுத்திக் கொள்வதாகவும் அந்த நபர் தனது வழக்கில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை டோக்கியோ நீதிமன்றம் விசாரித்தது. வழக்கு விசாரணைக்கு ஆஜரான குற்றம்சாட்டப்பட்ட பெண், வழக்கு தொடர்ந்த நபரின் மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். ஆனால், அவர்களின் திருமண வாழ்க்கையில் எந்தவித இடையூறும் ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்த அந்த பெண், அந்த பெண்ணின் விருப்பத்தின் பேரிலேயே உறவு கொண்டதாக கூறியுள்ளார். மேலும், பெண் ஒருவருடன், மற்றொரு பெண் உறவு கொள்வது நம்பிக்கைத் துரோகமாகாது என்றும் அந்த பெண் கூறியுள்ளார்.

Also read... துணை உங்களை ஏமாற்றுகிறார், பொய் சொல்கிறார் எனில் அவரது செல்ஃபோன் அழைப்புகளை ஆடியோ டிராக்கிங் செய்வது சரியா..?

வழக்கை விசாரித்த நீதிபதி திருமணமான பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்ட பெண்ணுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 70 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்தார். அந்தப் பணத்தை பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு வழங்குமாறும் உத்தரவிட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல் விசித்திரமான வழக்கு ஒன்று டோக்கியோ நீதிமன்றத்திலேயே நடைபெற்றது. அதில், அமெரிக்காவில் இரண்டு பெண்கள் லிவ்விங் டுகெதர் முறையில் 7 ஆண்டுகள் வசித்துள்ளனர். அதில், ஒரு பெண், துணையாக தேர்தெடுத்த பெண்ணை பாதியிலேயே விட்டுவிட்டு பிரிந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 1.1 மில்லியன் யென்னை அபராதமாக விதித்தது. ஆணும், பெண்ணும் இணைந்து வாழும் திருமண வாழ்க்கைக்கு உரிய நெறிமுறைகள் இரண்டு பெண்கள் சேர்ந்து வாழும் வாழ்க்கைக்கும் பொருந்தும் என தெரிவித்த நீதிபதி, ஆண் அல்லது பெண் பாதியில் விட்டுவிட்டு சென்றால் எப்படி ஜீவனாம்சம் கொடுக்கப்படுகிறதோ, அதனைப்போல் இந்த திருமணத்துக்கும் கொடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

கடந்த வாரம், ஒரே பாலின திருமணத்தை தடை செய்வது சட்டவிரோதம் என ஜப்பான் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்து கொள்வதை அனுமதிக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை அரசு கொண்டு வரவேண்டும் என 65 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்திருந்தனர். ஜப்பான் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு ஏற்கனவே நிலுவையில் இருக்கும் வழக்குகளை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் பலரும் கூறியுள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: