• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • 1 டஜன் மாம்பழங்களை ரூ.1,20,000 கொடுத்து வாங்கிய தொழிலதிபர் - நெகிழ வைக்கும் காரணம்!

1 டஜன் மாம்பழங்களை ரூ.1,20,000 கொடுத்து வாங்கிய தொழிலதிபர் - நெகிழ வைக்கும் காரணம்!

மாம்பழங்களை விற்பனை செய்யு சிறுமி

மாம்பழங்களை விற்பனை செய்யு சிறுமி

மாம்பழங்களை விற்று அதில் கிடைக்கும் வருமானத்தை சேர்த்து வைத்து ஒரு சிறிய ஸ்மார்ட் ஃபோன் வாங்க முடிவு செய்தார் சிறுமி துளசி.

  • Share this:
கோவிட் தொற்று உலகெங்கிலும் உள்ள கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படும் முறையை மாற்றியுள்ளது. தொற்றுப் பரவல் காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சவால் மாணவர்களை நேரில் வரவழைத்து, கல்வி கற்பிப்பது. ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் லேப்டாப்கள் உதவியுடன் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் பள்ளிப் படிப்பை ஆன்லைன் கிளாஸ் மூலம் தொடர்ந்து வரும் நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கியோரின் ஏராளமான குழந்தைகள் ஸ்மார்ட் ஃபோன் மற்றும் லேப்டாப் இன்றி தங்கள் பள்ளிகளில் நடைபெற்று வரும் ஆன்லைன் கிளாஸில் பங்கேற்க இயலாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அத்தகைய மாணவர்களில் ஒருவராக, தான் படிக்கும் பள்ளியில் நடைபெற்று வரும் ஆன்லைன் கிளாஸ்களில் பங்கேற்க முடியாமல் தவித்து வந்துள்ளார் ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூருக்கு அருகில் உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்த துளசி குமாரி என்ற சிறுமி. 11 வயது சிறுமியான துளசி குமாரிக்குத் தொற்று காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் பள்ளிப் பாடத்தைப் பயில ஒரு ஸ்மார்ட் ஃபோன் தேவைப்பட்டது. ஆனால் அவரது பெற்றோரால் ஸ்மார்ட் ஃபோன் வாங்கித் தர இயலவில்லை. இதனையடுத்து மாம்பழங்களை விற்று அதில் கிடைக்கும் வருமானத்தைச் சேர்த்து வைத்து, ஒரு சிறிய ஸ்மார்ட் ஃபோன் வாங்க முடிவு செய்தார் சிறுமி துளசி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனையடுத்து சாலையோரத்தில் மாம்பழங்களை விற்கும் பணியில் ஈடுபட்டார் சிறுமி. கடந்த சில நாட்களுக்கு முன், சாலையோரத்தில் மாம்பழம் விற்ற சிறுமியைப் பார்த்த செய்தியாளர் ஒருவர் இந்தச் சிறிய வயதில், அதுவும் தொற்றுப் பரவல் இருக்கும் சூழலில் எதற்காக மாம்பழம் விற்கிறாய், வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லையா என்று கேட்க, தன்னுடைய சூழலைச் சொல்லி, படிப்பதற்காக ஸ்மார்ட் ஃபோன் வாங்கவே மாம்பழம் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக சிறுமி குறிப்பிட்டுள்ளார். படிப்பதற்காக சாலையோரத்தில் மாம்பழம் விற்கும் சிறுமி என்ற தலைப்பில் சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் துளசி குமாரி பற்றிய செய்திகள் வெளியாகி நாடு முழுவதும் வைரலாகின.

ஒரு பிராந்திய ஊடகச் சேனல் நிறுவனம் மூலம் துளசி குமாரியின் கஷ்டத்தைப் பற்றி கேள்விப்பட்ட மும்பையைச் சேர்ந்த அமேயா ஹெட்டே என்ற தொழிலதிபர் சிறுமிக்கு உதவ முடிவு செய்தார். இதனை அடுத்து தனது தந்தையுடன் ஜார்க்கண்ட் சென்ற அவர் சிறுமியின் இருப்பிடத்திற்கே சென்று அவருக்கு உதவியுள்ளார். மும்பை தொழிலதிபர் சிறுமியின் பள்ளிப் படிப்பிற்கு உதவும் நோக்கில் அவரிடமிருந்து வெறும் ஒரு டஜன் மாம்பழங்களை (12 மாம்பழங்களை) ரூ .1.2 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். தொழிலதிபர் ரூ.1,20,000 பணத்தைச் சிறுமியின் தந்தை ஸ்ரீமல் குமாரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றினார். இந்தப் பணத்தில் ரூ.13,000 மதிப்புள்ள ஸ்மார்ட் ஃபோன் ஒன்றை அந்தச் சிறுமிக்குப் பெற்றோர் வாங்கி தந்துள்ளனர், சிறுமியின் படிப்பில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்கு சுமார் 2 வருடங்களுக்கு தேவையான டேட்டாவுடன் கூடிய பேக்கை ரீச்சார்ஜூம் செய்து கொடுத்துள்ளார் தொழிலதிபர்.

Also read... முன்னாள் காதலனுக்கு கிஃப்ட்டாக கொடுத்த காஸ்டலி பைக்கை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய பெண்... ஷாக் வீடியோ!

மனமுவந்து உதவிய தொழிலதிபருக்கு நன்றி தெரிவித்துள்ள சிறுமியின் தந்தை, தனது மகள் நிறைய படிக்க வேண்டும் என்பதே தங்கள் குடும்பத்தினரின் ஆசை என்றும், தங்கள் மகள் மாம்பழம் விற்க சென்றதை தன் மனைவி விரும்பவில்லை என்றும், இதன் பிறகு தனது மகளின் படிப்பிற்குத் தடை ஏதும் வராது என்றும் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். சிறுமியின் கல்விக்காக மிகப்பெரிய அளவில் நிதியுதவி செய்த தொழிலதிபர் குடும்பத்தை மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: