ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

சாலையோரங்களில் பல தாபா பார்த்து இருப்பீங்க... ஆனால் இந்த பெண் நடத்தும் தாபா புதுரகம்

சாலையோரங்களில் பல தாபா பார்த்து இருப்பீங்க... ஆனால் இந்த பெண் நடத்தும் தாபா புதுரகம்

தாபா

தாபா

ஜம்முவில் உள்ள பிக்ரம் சௌகி பகுதியில் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் கணவருடன் தினசரி செயல்படும்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Jammu and Kashmir, India

  நீண்ட பயணங்கள் மேற்கொள்ளும் போது நாம் அனைவரும் சாலையோரங்களில் பல தாபாக்களை பார்த்திருப்போம். ஆனால் இப்போது நாம் பார்க்க போகும் தாபா கொஞ்சம் வித்தியாசமானது. இந்த தாபாவின் கதையை தெரிந்து கொண்டால் நீங்கள் மிகவும் வியப்படைவீர்கள். இது மற்ற தாபாக்களில் இருந்து எப்படி வேறுபட்டது என்பதை இப்போது பார்க்கலாம். நாம் சாலையோரங்களில் பார்க்கும் தாபா ஒரே இடத்தில நிலையாக இருக்கும் அல்லவா? ஆனால் இந்த தாபா நகர்கிறது. ஆம், ஜம்முவில் ஒரு கணவன் மனைவி இருவரும் இணைந்து தங்களது காரில் தாபா ஒன்றை துவக்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

  ஜம்மு & காஷ்மீரில் உள்ளது கதுவா மாவட்டம். இதன் பிலாவர் பகுதியை சேர்ந்தவர் மம்தா சர்மா. இவரது கணவர் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் சிறிய வேலை பார்த்து வந்தார். இந்த வேலை மூலம் மாதம் ரூ.7,000 ஊதியம் பெற்று வந்தார். ஆனால் அந்த பாலிடெக்னிக் கல்லூரி சில காரணங்களால் திடீரென்று மூடப்பட்டது. இதனால் இவர்களது குடும்பம் பொருளாதார ரீதியாக பெரும் தடுமாற்றத்தை சந்தித்து உள்ளது.

  இது குறித்து கூறி இருக்கும் மம்தா ஷர்மா வேலை இழந்ததால் என் கணவர் கடும் சிரமத்தில் இருந்தார். எங்களுக்கு 2 குழந்தைகள், வருமானம் இல்லாததால் குழந்தைகளின் படிப்பும் பாதிக்கப்பட்டது. வீட்டு வாடகையை கொடுப்பதற்கும் சிரமப்பட்டோம். கஷ்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் என்னால் சுவையான உணவுகளை சமைக்க முடியும் என்று சொன்னேன். இருவரும் இணைந்து தாபா துவக்கலாமா என்று விவாதித்த நிலையில், அதற்கு ஏற்ற இடங்களை தேடினோம். ஆனால், எங்களுக்கு ஏற்ற இடம் அமையவில்லை. இந்த நிலையில் தான் "மொபைல் தாபா"-வை துவக்கலாம் என்ற ஐடியா எங்களுக்கு தோன்றியது. இதற்காக எங்களது மாருதி சுசுகி ஆல்டோ காரை பயன்படுத்த முடிவு செய்தோம் என்றார்.

  இதனை தொடர்ந்து ஜம்முவில் உள்ள பிக்ரம் சௌகி பகுதியில் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் கணவருடன் தினசரி செயல்படும் மொபைல் தாபாவை துவக்கி இருக்கிறார் மம்தா சர்மா. தங்கள் ஆல்டோ காரில் 'விஷ்ணு தாபா' என்ற பெயரில் தொழிலை துவக்கிய இந்த குடும்பம், தினமும் மதியம் 12 மணி மாலை 4 மணி வரை இந்த மொபைல் தாபா இயங்குகிறது.

  Read More: கோமாவில் கடவுளை பார்த்த அமெரிக்க பாட்டி..! கடவுள் என்ன சொன்னார் தெரியுமா?

  துவங்கி 100 நாட்கள் கூட ஆகாத நிலையில் டாப் ஷேர் கானியன் பகுதியில் இவர்களது விஷ்ணு தாபா மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி இருக்கிறது. தாபா திறக்க ஏற்ற இடம் கிடைக்காத நிலையில் தொழிலை துவக்க ஆல்ட்டோ காரை பயன்படுத்தி வரும் இந்த தம்பதியரின் ஐடியா மிகவும் அருமையானது என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

  விஷ்ணு தாபா துவங்கிய புதிதில் ஒரு நாளைக்கு ரூ.100 மட்டுமே சம்பாதித்தேன். பின் ஒரு மரத்தின் கீழ் எங்கள் காரை நிறுத்திய பின் அதிக மக்கள் எங்கள் தாபாவைநோக்கி வரத் தொடங்கினர். இன்று நாங்கள் எதிர்பார்த்ததை விட நன்றாக வருமானம் வருகிறது, நிறைவாக சாப்பிடுகிறோம் எங்கள் செலவுகளை கவனித்து கொள்கிறோம் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் மம்தா சர்மா.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Car