ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஜம்மு காஷ்மீரில் இ - ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் முதல் பெண் - குவியும் பாராட்டு

ஜம்மு காஷ்மீரில் இ - ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் முதல் பெண் - குவியும் பாராட்டு

சீமாதேவி

சீமாதேவி

Jammu and Kashmir | சீமா தேவி என பெயரிடப்பட்ட அந்தப் பெண் முதன் முதலில் மின்சாரத்தில் இயங்கும் ரிக்ஷாவை ஓட்டும் ஜம்முவின் முதல் பெண்மணி என அறியப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Jammu and Kashmir, India

இன்றைய காலத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல்வேறு துறைகளில் தங்கள் கால் தடத்தை பதித்து சாதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் பல முக்கிய துறைகளில் ஆண்களைவிட பெண்கள் உயர் பதவிகளில் அமர்ந்துள்ளனர். வெறும் குடும்பத் தலைவியாகவே பெண்கள் இருக்க வேண்டும் என்ற நிலை மாறி பல்வேறு துறைகளில் தங்களை மேம்படுத்திக் கொண்டு வருகின்றனர். இதுமட்டுமன்றி டாக்ஸி ஓட்டுவது, பேருந்து இயக்குவது, ஆட்டோ ஓட்டுவது என ஆண்கள் மட்டுமே செய்து வந்த பல வேலைகளை இப்பொழுது பெண்களும் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

ஒருபுறம் இவை பெண்களின் மன உறுதியை வெளிப்படுத்தினாலும் மற்றொரு கோணத்தில் அவர்களின் வறுமை நிலையை எண்ணி பார்க்காமல் இருக்க முடியவில்லை. எது எப்படியோ சமுதாயத்தில் மிதிக்கப்பட்டு வந்த பெண்களின் நிலை தற்போது படிப்படியாக உயர்ந்து வருகிறது என்பதே உண்மை. அந்த வகையில் பெண்ணியத்தை பறைசாற்றும் விதமாக ஜம்முவை சேர்ந்த ஒரு பெண்மணி மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ ரிக்ஷாவை இயக்கி வருகிறார். ஜம்முவை சேர்ந்த பெண்மணி ஒருவர் ஈ-ரிக்ஷா ஓட்டுவது இதுவே முதல் முறையாகும்.

சீமாதேவி என பெயருடைய அந்த பெண்மணி ஜம்முவின் நக்ரோடாவில் உள்ள தோக் வசீர் என்று பகுதியில் வசித்து வருகிறார். ரிக்ஷா ஓட்டுவதற்கு தனது வறுமை நிலையே காரணம் என கூறியுள்ளார். இதைப்பற்றி பேசிய சீமாதேவி ”எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மூவரும் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கின்றனர். மேலும் நானும் எனது கணவரும் சேர்ந்து வேறு ஒருவரிடம் கடன் வாங்கி தான் இந்த ஆட்டோ ரிக்ஷாவை வாங்கியுள்ளோம். ஆட்டோ ரிக்ஷாவை எப்படி இயக்குவது என்பதைப் பற்றி எனது கணவர் எனக்கு பயிற்சி அளித்தார்” என்று சீமாதேவி கூறியுள்ளார்.

தனது கணவரிடம் இரண்டு நாள் பயிற்சி எடுத்த பிறகு, சீமாதேவி ஆட்டோ ரிக்ஷாவை தனியாகவே இயக்ககும் அளவிற்கு அதன் நுணுக்கங்களை கற்றுக் கொண்டுள்ளார் மேலும் தற்பொழுது ஆட்டோ ரிக்ஷாவை ஓட்டி தனது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்தும் வருகிறார். ஆட்டோ ஓட்டுவது ஆண்களால் மட்டுமே செய்ய முடிந்த வேலை என்று கூறப்பட்டு வந்த நிலையில், பெண்ணான நான் இதை செய்வது தனக்கு பெருமையாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Also Read : மனிதரை போல் காரில் கெத்தாக அமர்ந்து சென்ற நாய் - வைரல் வீடியோ.!

“முதன் முதலில் நான் ஆட்டோ ஓட்டுவதை பார்த்து பலர் என்னை கிண்டல் செய்தனர். ஆனால் நான் அவர்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் என்னுடைய வேலையில் முழு கவனத்தையும் செலுத்தினேன். ஆட்டோ ரிக்ஷா ஓட்டியே அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவது ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் போகப்போக அனைத்தும் எனக்கு பழகி விட்டது. மேலும் என்னுடைய கணவரும் எனக்கு முழு பக்க பலமாக இருந்து வருகிறார். மேலும் மூன்று குழந்தைகளும் பள்ளிக்குச் செல்வதால் நான் ஆட்டோ ரிக்ஷா ஓட்டி பணம் ஈட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளேன்” என்று சீமாதேவி குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு சீமாதேவி ஆட்டோ ஓட்ட ஆரம்பித்து ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால் இப்பொழுதும் கூட தான் ஒரு பெண் என்பதால் பல ஆண்கள் தன்னுடைய ஆட்டோவில் பயணம் செய்ய தயங்குவதாக அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார். அவ்வாறு தயங்குபவர்களிடம்” ஒரு ஆண் ஆட்டோவை இயக்குவதற்கும் பெண் ஆட்டோவை இயக்குவதற்கும் என்ன வேறுபாடு கண்டீர்கள்? நான் இருவருக்கும் ஒரே அளவில் தான் பணம் வாங்குகிறேன். மேலும் ஒரு பெண் இயக்கும் ஆட்டோவில் உட்கார்ந்து பயணிப்பதில் எந்தவித கௌரவ பிரச்சனையும் இல்லை” என்று அவர் கூறுவாராம்.

Also Read : எல்லாமே ஆச்சரியம்தான்.. அதிசயக்க வைக்கும் யானைகள்!

மேலும் சீமா தேவி ஆட்டோ ஓட்ட ஆரம்பித்ததில் இருந்து அங்குள்ள பல தாய்மார்கள் தங்களுடைய பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லவும் அங்கிருந்து மீண்டும் வீட்டிற்கு கூட்டி வரவும் சொல்வதாக சீமா தேவி பெருமையுடன் சொல்கிறார். ஒரு பெண் ஆட்டோ ஓட்டுவதால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருப்பதாக அந்த தாய்மார்கள் நினைப்பதாகவும் கூறியுள்ளார். சீமாதேவிக்கும் தினமும் 200-500 வரை வருமானம் கிடைப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னைப் போலவே வறுமையில் இருக்கும் பல பெண்களும் எவ்வாறு வெளியே வந்து வேலைகளை செய்து தங்களை முன்னேற்றிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளார். தன்னுடைய ஆட்டோவிற்காக அரசாங்கத்திடமிருந்து மானியம் பெறுவதற்கான கோரிக்கையும் அவர் வைத்துள்ளார்.

Published by:Selvi M
First published:

Tags: Jammu and Kashmir, Tamil News, Trending