ஜேம்ஸ் கேமரூன் இயக்கி முடித்துள்ள 'அவதார் 2' ... வைரலாகும் புகைப்படங்கள்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கி முடித்துள்ள 'அவதார் 2' ... வைரலாகும் புகைப்படங்கள்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கி முடித்துள்ள 'அவதார் 2' படப்பிடிப்பின் புகைப்படங்கள் வைரல்..

ஜேம்ஸ் கேமரூன் இயக்கி முடித்துள்ள 'அவதார் 2' படப்பிடிப்பின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

  • Share this:
2009ம் ஆண்டு முதல் அகாடமி விருது வென்ற அவதாரின் (Avatar) அடுத்த பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் வெளியான புகைப்படம் ஒன்று ரசிகர்களின் ஆர்வத்தை இன்னும் அதிகமாக்கியுள்ளது. கடந்த டிசம்பர் 15ம் தேதி, அவதாரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் ஜேம்ஸ் கேமரூனின் படப்பிடிப்பு தளம் எப்படி இருக்கும் என்பதை காண்பிக்க செட்டின் சில படங்கள் வெளியிடப்பட்டன. அவதார் படத்தின் தயாரிப்பாளர் ஜான் லாண்டவு (Jon Landau) இந்தப் பதிவை வெளியிட்டிருந்தார். அவதார் பட செட்டில் இருந்து எடுக்கப்பட்ட மூன்று படங்களை அவர் பதிவிட்டிருந்தார்.

அவர் வெளியிட்ட படங்களில் ஒன்று, மூன்று டெக்னோகிரான்கள் மற்றும் ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் மேல் ஒரு ரஷ்ய ஆயுதம் பொருத்தப்பட்டிருப்பதைக் காட்டியது. 
View this post on Instagram

 

A post shared by Jon Landau (@jonplandau)


கடந்த 2009ம் ஆண்டு 1500 கோடி செலவில் வெளியான அவதார் திரைப்படம் சுமார் 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது. மேலும் உலக அளவில் பெரிதும் வெற்றிபெற்ற இந்த திரைப்படத்தை 5 பாகங்களாக எடுக்க உள்ளதாக கடந்த 2016ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருந்தார். படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவதார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக கடந்த செப்டம்பர் மாதம் இயக்குநர் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

அதில், "அவதார் 2" படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டதாகவும், "அவதார் 3" படப்பிடிப்பு 95% முடிவடைந்துவிட்டதாகவும் கூறியிருந்தார். மேலும், 2ம் பாகம் 2021ம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2022ம் ஆண்டு வெளியாகும் எனவும் அறிவிப்பு வெளியானது. அதன்படி மிக சமீபத்திய தொடரான அவதார் 2 2022ல் டிசம்பர் 16 அன்று வெளிவரும் என்றும், அவதார் 3 2024ல் டிசம்பர் 20 அன்று வெளியிடப்பட உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. 
View this post on Instagram

 

A post shared by Jon Landau (@jonplandau)


கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, படத்தின் தயாரிப்பு தாமதமானது. இருப்பினும், கொரோனா வைரஸ் பரவுவதை கணிசமாகக் கட்டுப்படுத்திய பின்பு நியூசிலாந்தின் சிறப்பு அனுமதியுடன் அந்நாட்டில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. அவதார் இரண்டாவது தொடரில் கேட் வின்ஸ்லெட், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், வின் டீசல், ஜோ சல்தானா மற்றும் சாம் வொர்திங்டன் ஆகியோர் நடிக்கின்றனர்.

அகாடமி விருது வென்ற இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார், மனிதப் படையெடுப்ப
Published by:Rizwan
First published: